பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177

பெருக்கத்திலே இருக்கிறது. இதை இந்திய இளைஞர்கள் உணர்ந்தால், நாடு முன்னேறும். நம் இயற்கை அறிவில் குறையேதும் இல்லை. அது ஒருமனப்பட்டு ஆழப் பணி புரிய வேண்டுமே என்று மனக் குதிரை தாவிற்று.

' எல்லா கிலேயிலும் இலவச மென்றிர்கள். எல்லா கிலேயிலும் கல்வி கட்டாயமா ?' என்று நண்பர் கேட்ட கேள்வி, என் மனக் குதிரை எங்கோ ஓடி விடாமல்

இழுத்துப் பிடித்தது. பதிலேக் கேட்டேன்.

பத்தாம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி. பத்தாம்

வகுப்பே, பள்ளியிறுதி வகுப்பு. எனவே எல்லோரும்

பத்தாவது வரை கட்டாயம் படிக்க வேண்டும். அதற்குக்

குறைந்த கல்வி, இக்காலத்திற்குப் போதாது."

பள்ளிக்கூடங்களில் என்னென்ன மொழிகளை பாடங்களை கற்றுக் கொடுப்பார்களென்று விசாரித்தேன்.

படிப்பைத் தொடங்கும்போது தாய் மொழியைக் கற்றுக் கொடுப்பார்கள். மூன்ருவது வகுப்பில் இரஷ்ய மொழியைத் தொடங்குவார்கள்.

' ஐந்தாம் வகுப்பிலிருந்து அயல்நாட்டு மொழி யொன்றைச் சொல்லிக் கொடுப்பார்கள். '

சொல்லிக் கொடுக்கப்படும் அயல்நாட்டு மொழிகள் எவை?

ஆங்கிலம், ஜெர்மானியம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜப்பானிய, சீன மொழிகள், உருது, இந்தி ஆகியவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன. அவை அத்தனையும் எல்லாப் பள்ளிகளிலும் சொல்லிக் கொடுப்பதில்லை. ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டொன்ருே, சிலவோ இருக்கும். ஜப்பானிய எல்லையோரப் பள்ளிகளில் ஜப்பானிய மொழியும். சீன எல்லையோரப் பள்ளிகளில்