பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

சீன மொழி கற்றுக் கொடுப்பார்கள். ஏதாவதொன்ம்ை

படிப்பார்கள் சிறுவர் சிறுமியர்.

உருதுவும் இந்தியும் சொல்லிக் கொடுக்கிருர்கள்ா

என்று வியப்போடு கேட்டார் திரு. கான்.

ஆம் என்ற பதில் வந்தது.

கான் முதன் முறை டாஷ்கண்டிற்குப் போன போது. ஓர் பள்ளியில் உருதுவும் இந்தியும் கற்பிக்கப்பட்டதைக் கண்ணுரக் கண்டேன் என்று கூறி உறுதிப்படுத்தினேன்.

மும்மொழிப் படிப்பு எதுவரை என்ற ஐயம் எழுந்தது. பள்ளிப்படிப்பு முடியும் வரை மூன்று மொழி கற்க வேண்டுமென்று தெரிந்து கொண்டோம்.

எந்த மொழியை அதிகம் பேர் படிக்கிருர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? ஆங்கிலத்தையே அதிகம் பேர் படிக்கிருர்களாம்.

பாட மொழி எது? ஒன்றல்ல பல. அவரவர் தாய்

மொழியே பாடமொழி.

பாடங்களைப் பற்றிக் கேட்டோம். கணக்கு, வரலாறு, பூகோளம், விஞ்ஞானம், கை வேலை. வேலேப் பயிற்சி ஆகியவை முதல் வகுப்பிலே இருந்து கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இவை எங்கும் கடற் று க் கொடுக்கப்படுபவை. கைவேலை, வேலைப்பயிற்சி என்ருர் களே, அவற்றைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினுேம்:

முதல் வகுப்பில் இரசாயனக் களிமண் வேலையில் தொடங்குவார்கள். இதற்கு கைவேலை என்று பெயர். வகுப்புகள் உயர உயர கைவேலை கடினமாகும். ஆற்ம் ஏழாம் வகுப்புகளில் தகடுகளைக் கொண்டு பயன்படும் பொருள்களைச் செய்யப் பழகிக் கொள்வார்கள். o