பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179

எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை எல்லா மாணவ மாணவிகளும் வேலைப் பயிற்சி பெறு கிருர்கள். எல்லோரும் எல்லா வேலைகளுக்கும் பயிற்சி பெறுவதில்லை.

வேலைப் பயிற்சியானது பயிர்த்தொழில், ஆலேத் தொழில், போக்குவரத்துத் தொழில், அலுவலக வேலே எனப் பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படும். மாணவர். தனக்கு விருப்பமான எதையாவது தேர்ந்தெடுத்துக் கொள்வார். எடுத்துக் கொண்ட வேலையை, ஏனே தானே. வென்று, பள்ளிக்கூடத்தில் பழகுவதில்லை. இயல்பான சூழ்நிலையிலேயே வேலைப்பயிற்சி பெறுவார்கள்.

பயிர்த்தொழில் தெரிந்து கொள்ள விரும்புவோர் பண்ணைக்குச் சென்று அங்கேயே சில நாள் தங்கியிருந்து, வேளாண்மை வேலைகளைச் செய்து பழகிக் கற்றுக் கொள்வார்கள். சில மணிவேலை; சில மணி ப்ாடம் என்று மாறி மாறி வரவும் மாட்டார்கள். ஒரே மூச்சாக சில நாட்களில் வேலை நுணுக்கங்களைத் தெரிந்து கொள்வார் கள், இப்படியே ஒவ்வொரு வேலைக்கும் வேலைச் சூழ்நிலை யிலே பயிற்சி உண்டு.

வேலைப் பயிற்சி இருக்கட்டும்; சமயக் கல்வி' உண்டா?' என்று குறுக்கிட்டோம்.

":சமயம் தனி நபர் விவகாரம். பள்ளிக்கூடங்களில் சமயக் கல்வி கற்பிப்பதில்லை. கற்பிக்கக் கூடாது. ஒழுக்கக் கல்வி உண்டு' என்று சொன்னர்கள். விசாரிப்பு தொடர்ந்தது.

எவ்வளவு பேர் தேறுவார்கள். எவ்வளவு பேர் அதே வகுப்பில் இரண்டாம் ஆண்டு தேங்கிக் கிடப் பார்கள்?"