பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

"எல்லோரும் தேறுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் தேறுவார்கள். ஒரே வகுப்பில் தேங்கிக் கிடப்பது கிட்ை யாது.'

வியப்பாக இருக்கிறதா? வியப்பில்லே. தொட்ர்ந்து படியுங்கள.

ஒவ்வோர் வகுப்பிலும் மாதச் சோதனை உண்டு: மாணவர்கள் மதிப்பெண்களைப் பதிந்து கொள்வார்கள். இரண்டொரு திங்கள் இப்படி சோதனே கடத்தியதும் தேர்ச்சியில் தயங்குகிறவர்கள் யார் யார் என்று ஆசிரியருக்குத் தெரிந்துவிடும். பின்னடைவோரில், யார் எந்தெந்தப் பாடத்தில் மெல்ல வளருகிருர் என்பதும் தெரியும்.

தெரிந்து கொண்டதோடு கிறைவு கொள்ள மாட்டார் ஆசிரியர். அறிவைச் செயல்படுத்துவார். பின்னடையும் மாணவ மாணவிகளுக்கு, பள்ளிக் கூடத் திலேயே முறைப் பாடஞ் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்வார். ஒவ்வொரு நாள் ஒரு பாடத்திற்கு முறைப் பாடம் இருக்கும். அப்பாடத்தில் குறைந்த எண் பெற்ற வர்கள் அன்று, முறைப் பாடங்கேட்க வருவார்கள். இப்படியாகக் கூடுதலாகச் சொல்லிக் கொடுப்பதன் மூலம், பின்னடைகிறவர்களும் போதிய மதிப்பெண் பெற்று மேல் வகுப்புக்குத் தகுதியாகும்படி செய்வார்கள்.

இவ்வளவு பாடுபட்டும் இரண்டொருவர், போதிய தேர்ச்சி அடையாமல் இருந்தால், சலித்து கைவிட்டு விடமாட்டார்கள்.

அந்த இரண்டொருவரை கோடை விடுமுறையின் போது, பள்ளிக்கு வரச் செய்து, மேலும் கற்றுக் கொடுத்து, அவர்களையும் தேற வைத்து விடுவார்கள்.