பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191

புல்க்ல்க்கமுக் கம்ப்யூட்டர் நிலயத்தைப் பார்த்து. விட்டு நூல் நிலையத்தைக் கண்டோம். ஏராளமான நூல்கள்: எண்ணற்ற சஞ்சிகைகள்; அவற்றையெல்லாம் ஆர்வத்தோடு படித்துக் கொண்டிருந்தவர்கள்: இவற்றைக் க்ண்டு மகிழ்ந்து விட்டு, அந்த நாளும் வந்திடாகோ எங்கள் காட்டில் என்று கூறிக் கொண்டே அடுத்த நிகழ்ச்சிக்குச் சென்ருேம்.

இந்திய மாணவர்கள் மத்தியில்

அடுத்த நிகழ்ச்சி, பல்கலைக்கழகத்திலேயே, இந்திய மாணவர்கள் விரும்பியபடி, நாங்கள் அவர்களேக் கண்ே உரையாட ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். கூட்டம் கடக்க வேண்டிய பெரிய அறைக்குள் எங்களை விட்டு. விட்டு, உடன் வந்த பேராசிரிய்ர் விலகிக் கொண்டார்.

மாணவர்களும் மாணவிகளுமாக இருபத்தைந்து பேர்கள் போல் கூடியிருந்தனர். தேனிர் அளித்தனர்.

சோவியத் இந்திய உடன்படிக்கையைப் போற்றி வரவேற்றனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சண்டை மூளுமானுல் சமாளிக்க ஆயத்தமாக இருச்சி ருேமா என்பதை ஆவலோடு கேட்டார்கள். தாங்கள் சோவியத் காட்டில் பயிற்சி பெற்றுத் திரும்பியதும். உடனுக்குடனே தக்க வேலை கிடைக்குமாவென்று கவலே யோடு கேட்டார்கள். பெரும்பாலான இந்தியர்கள் பொறியியல் துறையில் பயிற்சி பெறுகிருர்கள்.

கோடை விடுமுறையின்போது, வெளிநாடுகளுக்குச் சென்று வர முன்பெல்லாம் அனுமதித்தார்களாம். இரண்டொரு ஆண்டுகளாக அனுமதி இல்லை. இதற்குப் பரிகாரம் கண்டு உதவும்படி வேண்டிக் கொண் டார்கள்.

இதைப்பற்றி, பிறகு வெளியே விசாரித்தோம். விடுமுறையின் போது வெளிநாடுகளுக்குச் ச்ெல்ல.