பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

அனுமதிக்கப்பட்ட காலத்தில் பல நாட்டு மாணவர்கள் ஐரோப்பாவில் வேலை செய்து, பணம் சம்பாதித்து அதைக் கொண்டு பலவகையான போகப் பொருள்கள் வாங்கி வந்து, சோவியத் நாட்டில் மறைவாக விற்பதில் ஈடுபட்டார்களாம். இதனுல் சோவியத் மக்களிடைய்ே அதிருப்தி ஏற்பட்டது. வெளிநாட்டு மாணவர்கள் விடுமுறையின் போது வேலை செய்ய விரும்பினல் சோவியத் நாட்டிலேயே வேலை செய்ய ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, வெளிநாட்டுப் பயணங்களைக் கட்டுப் படுத்தியுள்ளார்கள் என்று கேள்விப்பட்டோம்.

கான், இந்திய மாணவர் கூட்டத்தில் பேசினேன். கவனமாகப் படித்து, விரைவிலே, மிக உயர்ந்த தரத்தில் தேறும்படி வேண்டினேன்.

படித்தவர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் மிகுந்திருப்பதைப்பற்றி பிரதமர் திருமதி இந்திர்ா காந்தி உணர்ந்திருப்பதாகவும் ஆகவே அதற்கு விரைவில் பரிகாரம் கிடைக்குமென்றும் கூறினேன்.

இளைஞர்கள், வேலை பெறுவதோடு, புதியதோர் இந்தியாவை உருவாக்க உரிமை பெற்றிருக்கிருர்கள். வறுமையற்ற, வளமிக்க, எல்லோர்க்கும் வாழ்வளிக்கும் புதிய கிலேயை உருவாக்குவோம் என்ற உறுதியோடு திரும்பி வரும்படி வேண்டிக் கொண்டேன்.

இந்திய துrதுக்குழு, அடுத்த நாள் லெனில் கிராடில் கூடி, அங்கு இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முன் கூட்டியே, சில தவிர்க்க முடியாத, பல்கல்ைக் கழகப் பணிக்கு நாள் குறித்து விட்டு நான் சோவியத் -நாட்டிற்குச் சென்றேன். எனவே, மற்றவர்களுக்கு முன்னதாகவே நான் இந்தியா திரும்ப வேண்டிய தாயிற்று.