பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193

திரு. கான் அவர்களே, இரவு இரயிலில் லெனின் கிராடுக்கு அனுப்பி வைத்தேன்.

தொல்பொருட்காட்சியில்

. மறுநாள், கிரெம்ளினுக்குள் உள்ள அரண்மனையில் அமைக்கப்பட்டிருக்கும் பொருட்காட்சியினைக் கண்டேன். அது காண வேண்டிய ஒன்ருகும்.

ஜார் மன்னர்களும் அவர்கள் குடும்பத்தினரும் பயன்படுத்திய மணி முடிகள், நகைகள், பட்டாடைகள், பொன்ைைடகள் அத்தனையும் பத்திரமாகப் பாதுகாக் கப்பட்டு, கண்ணுடிப் பெட்டிகளில் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.

மன்னர்கள், முற்காலத்தில் போர்க் களங்களுக்குச் செல்வதுண்டு. அப்போது பாதுகாப்பிற்காக இரும்புக் கவசங்கள் அணிந்து செல்வார்கள். இரும்புத்தகடுகளால் செய்யப்பட்ட கவசங்கள் பல; இரும்பு வலைகளால் பின்னப்பட்ட கவசங்கள் சில; கனமான அக் கவசங்சள், கனமான மன்னர்களுக்குச் சுமையாக இல்லை போலும். கவசங்களேக் கண்டு,விட்டு நகர்ந்தோம். வகை வகையான குத்திட்டிகள், வாட்களேக் கண்டோம். பழைய வாட்கள் போர்க் கருவிகளாகவே காட்சியளித்தன. பிற்காலத்திய வாட்கள் சிலவற்றில் கைப் பிடிகளுக்கு மணியும் முத்தும் பதித்திருப்பதைக் கண்டோம்.

மணி முடிகள் எத்தனை வகை. அவற்றில் சிலவற்றை கம் தலையில் வைத்தால், கனம் தாங்க முடியாமல் வீழ்ந்து விடுவோம். மண்டையில் கனத்தை வைத்துக் கொள்ள வேண்டியிருந்த அம் மன்னர்கள், காலில் ஒளியை வைத்திருந்தார்கள்.

மணி முடிகளில் ஒளிவிடும் நவமணிகளே கிறையப் பதித்து வைத்திருந்ததைப் போல், காலணிகளிலும் ஒளி