பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

ஐம்பதாவது நாடகம். அதைக் காண இந்திய துாதுக் குழுவினன் என்ற முறையில் என்னே அழைத்துக் கொண்டு. போனர்கள். நம் கதையை, அருமையாக, இரஷ்ய மொழியில் அமைத்து, பொருத்தமான காட்சிகளோடும் பாவத்தோடும் இரஷ்ய நடிகர்கள் நடித்தார்கள். நம் ஊரில் சிறந்த நடிகர்கள் நடித்தால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது.

இடை வேளையில், அக் கதையை எழுதிய அம்மை யாரோடு, நாங்கள் சிலர் சிற்றுண்டி அருந்தினுேம்.

'இந் நாடகத்திற்கு, குழந்தைகள் நடுவில் நல்ல வரவேற்பு. ஏராளமான பாராட்டுக் கடிதங்கள் நாள் தோறும் வருகின்றன. அவற்றில் பல நாங்கள் கணவனேடு சேர்ந்து துன்பத்தைப் பகிர்ந்து கொண்ட சீதையைப் போல் இருப்போம் என்று கூறுகின்றன. இவ்வெண்ணம் வேரூன்றினல், மேடுைகளில் விவாக ரத்துகள் குறையலாம்' என்று நாடகாசிரிய அம்மையார் பூரித்தார். -

இலங்கா தகனக் காட்சி முடிந்ததும், விமானத் திற்குச் செல்ல நேரமாகி விட்டது என்று நினைவுபடுத்தி என்னே விமான கிலேயத்திற்கு அழைத்துச் சென்ருர்கள்.

கல்வியிலும் அறிவிலும், மனிதாபிமானத்திலும், மக்கள் இனப்பற்றிலும் விரைந்து முன்னேறியுள்ள வர்கள் சோவியத் மக்கள். அவர்கள் இந்திய சோவியத் உடன்படிக்கையை ஆர்வத்தோடு வரவேற்பதை நேரில் கண்டு மகிழ்ந்தேன். அண்ணன் தம்பிகளோடு சில நாட்கள் தங்கியிருந்தது போன்ற உணர்ச்சியோடு சோவியத் மக்களிடம் விட்ை பெற்றேன். மாஸ்கோ. விமான நிலையத்தை விட்டு "ஏரோப்ளோட் விமான

மூலம் தில்லிக்குத் திரும்பினேன். "வாழ்க சோவியத் இந்திய நட்புறவு. வாழ்க மானுடம்' என்று மந்திரித்தது. என் இதயம். : -

o, * _ ---- _ **. * * * دستگاه یه --- ੋਂ so.

o *、*"二二リ。

      • リー、"二・て ---- Ğ•,” \"\ ... " /ーブペー - でNN

o, W. o * o r F

( " " - ན་ཁ་དེ། ། o o - - | " . . _ N N so o = த s Co. # H = }

  • -