பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

காபூலில் அப்போதுதான், குளிர்காலம் தொடங்: ஒற்று. காலேயில் குளிர் காற்றும் சிறிற்று. எல்லோரும். 'பெரிய கம்பளியைப் போர்த்துக் கொண்டு பெரிய தலைப் பாஆையும் நீண்ட காலணிகளேயும் அணிந்து கொண்டு, கால ஏழு மணிக்கெல்லாம் வேலைக்குச் செல்வதைக் ஆண்டேன். ஆப்கானியர்கள், பெரிய பாரங்களே முதுகின் மேல் சுமந்து கொண்டு, நடப்பதிலும் மலேயேறுவதிலும் கைதேர்ந்தவர்கள். அதிகாலையில் இந்தக் காட்சியைப் பார்த்தபடி கின்றேன்.

ஏதோ ஒலி கேட்டது. ஓசை வந்தப் பக்கம் திரும் பினேன். ஒராள், கழுதையொன்றின் மேல், காய்கனிகளே ஏற்றி வருவது தெரிந்தது. வீடுவீடாக அவற்றை விற்றுக் கொண்டு வந்தார். ஒட்டலுக்கு எதிர் வீட்டில் வந்ததும் அவர், பழைய ஒலியை எழுப்பினர். வீட்டிலிருந்து பதில் வந்தது. வீட்டிலிருந்து யாரும் வெளியே வந்து பதில் சொல்லவில்லே. எனவே ஆப்கானியப் பெண்களின் உடையைக் கவனிக்க வாய்ப்பில்லை. ஆப்கானிய விமான சர்வீஸில் பணிபுரியும் ஆப்கன் பெண்கள், மேனுட்டுப் பாணியில் உடுத்தியிருந்ததைக் கண்டோம்.

வேண்டாம் என்ற பதிலாக இருக்க வேண்டும்! அவர் அங்கே கிற்காமல் கழுதையை ஒட்டிக் கொண்டு போய் விட்டார். கழுதையின் முதுகில் மேலிருந்து, இருபக்கங்களிலும் கோணிப்பைகள் தொங்கின. ஒரு பக்கத்துப் பையில் தளதளவென்ற தக்காளிப் பழங்கள். மறுபக்கத்துப் பையில், பெரிய உருளேக் கிழங்குகள்.

முதல் காய்கறி வியாபீன்ரி சென்ற சில நிமிடங்: களுக்குப் பிறகு மற்ருெரு வணிகர், காய்கறிகளைக் கூவிக் கொண்டே வந்தார். அவர் ஒட்டி வந்த கழுதை, ஒரு. பக்கத்துப் பையில் முட்டைகோசையும் மற்ருெரு பையில் 'காலிபிளவர்களையும் சுமந்து கொண்டு வந்தது.