பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

களாகவா? இல்லை. நன்கொடையாளர்களாகவா? ஆம். இந்தியாவின் செலவிலேயே ஒரு மருத்துவ நிலையத்தைக் கட்டும் வேலை கடந்து கொண்டிருந்தது. வேலை கடக்கும் இடத்திற்குச் சென்ருேம். ஆப்கானியர்பால் நாம் கொண்டுள்ள நல்லெண்ணத்தின், நட்பின், அடையாள மாகப் பணிபுரியப் போகும் அம் மருத்துவமனைக் கட்ட டத்தைக் கண்டு பெருமை கொண்டோம். அது பெரிதா? சிறியதா? பெரியது. நூறு படுக்கைகள் கொண்டது. அது சிறுவர்களுக்கான மருத்துவ விடுதி.

ஆப்கானிய அரசின் அனுமதிபெற்று, ஆப்கானியக் குழந்தைகளுக்காக அம் மருத்துவமனையைக் கட்டிக் கொண்டிருக்கிறது, இந்தியா. மேற்பார்வையாளர்கள் யார்? இந்தியப் பொறியர்களும் மருத்துவர்களும் இணைந்து மேற்பார்வை செய்கிருர்கள். மருத்துவமனை, இரண் டொரு மாதங்களில் முடியும் கிலையில் இருந்தது. மொத்தத்தில் வேலை சுறுசுறுப்பாகவே நடப்பதாகக் கேள்விப்பட்டோம்.

அதிகாலையிலேயே, பொறியர், வேலை நடக்கும் இடத்திற்கு வந்துவிடும்போது, வேலை தேங்காமலே கடப்பது வியப்பா? வாடைக் காற்று சிறி அடிக்க, காலை ஒன்பதரை மணிக்கு, நாங்கள் அங்குச் சென்றபோது, மேற்பார்வையாளர்கள் அலுவல்களில் ஆழ்ந்து ஈடுபட்டி ருந்ததைக் கண்டோம். காலே வேலை விரைவான வேலை என்ற இரகசியம் நமக்குத் தெரிந்ததே! வெய்யில் ஏறு வதற்கு முன் அன்ருட வேலைகளைத் தொடங்கிவிடக் கற்றுக் கொள்வோமாக.

மருத்துவ கிலேயத்தைக் கட்டி முடித்ததும், ஆப்கானிய அரசிடம் ஒப்படைத்து விடுவோம். அந்த அரசே அதை கடத்தும், ஆல்ை, தொடக்கத்தில் இரண்டு மூன்று ஆண்டு