பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

வற்றை கலியுக கர்ணகைக் கருதுவது தவறு. இந்தியாவும் சேர்ந்து அமைக்கப்பட்டவையே அச் சபைகள். அவை அளிக்கும் உதவியைப் பெற நமக்கு உரிமையுண்டு; நமக்குக் கொடுப்பது பிச்சையல்ல.

இந்திய அரசின் ஆண்டுச் சந்தாவையும் பெற்று வாழ்பவை அவை. ஆண்டிற்கு ஆண்டு நாம் யூனிசெப் பிற்குக் கொடுக்கும் கிதி, சிறுதொகையல்ல. நம் நிலைக்கு ஆண்டு சந்தா அறுபத்தைந்து இலட்சம் குறைவா? நாம் பல்லாண்டுகளாகச் செலுத்திய சந்தாக்களேக் கூட்டிப் பாருங்கள். அவற்றை நல்லவண்ணம் முதலீடு செய்திருந் தால் நாடு தானே வளர்ந்திருக்கும். ஆயினும், நாமும் உலக சமுதாயத்தோடு ஒன்றி இருக்க வேண்டும்; இயங்க வேண்டுமென்பதற்காக இத்தகைய அவைகளில் உறுப் பினராக இருப்பதோடு, தாராளமாக, அநேகமாக பாக்கியில்லாமல், சந்தா செலுத்தி விட்டே, சிறுசிறு, உதவிகளைப் பெறுகிருேம். அவ்வுதவித் திட்டங்களை நடத்தும் அதிகாரிகள் பெரும்பாலார் மேனுட்டார். அந்த அதிகாரிகளைக் கூட தெய்வ வள்ளல்'களாகக் கருதும் நிலை கீழ் மட்டங்களில் உருவாகிவிடுகிறது, அத்தகைய மனப்போக்கே, ஆதிக்க வல்லரசுகள், வளரும் நாடுகளை, சொன்னபடி கேட்கும் சிற்றரசுகளாகப் பாவிக்கும் அகந்தைக்கு உயர்த்திவிடுகிறது. உலகத் தொண்டு கிதிகளுக்கும் நம்மாலானதைக் கொடுத்து விட்டே, உரிய பங்கைப் பெற்றுக் கொள்கிருேம் என்பதை, நாட்டு மக்கள் உணர்தல் நல்லது.