பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

காபூல் விமான நிலையத்திற்குக் குறிப்பிட்ட நேரத்தில் போய்ச் சேர வேண்டுமென்ற துடிப்பில், காபூல் குழந்தைகள் மருத்துவ நிலையத்தைக்கூட, ஆர அமர, சுற்றிப் பார்க்காமல், தலை தெறிக்க ஓடி வந்தோம். காங்கள் காரை விட்டு இறங்கியதும் இறங்காததுமாக, ஒருவர் எங்களிடம் வந்து. விரைவாக உள்ளே வரும்படி வேண்டினர். அப்படியே விரைந்து சென்ருேம். பயணச் சிட்டுத் தணிக்கை, சுங்கத் தணிக்கை ஆகியவை கொடியில்

நிகழ்ந்தன; மரியாதையாகவும் நிகழ்ந்தன.

'இன்று, விமானம் புறப்படும் நேரத்தை, ஒரு மணி முன்னதாக்கி விட்டோம். உங்களுக்குத் தகவல் கொடுக்க முடியவில்லை; நீங்கள் தங்கியிருந்த ஒட்டலின் பெயர் தெரியாத காரணத்தால். எல்லாப் பயணிகளும் ஏற்