பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

கடந்து விட்டோம் என்பதை உணர்ந்தேன். பத்தாண்டு களுக்கு முன்பு போனது கினேவில் வந்தது. உஸ்பெக் குடியரசின் கலநகராகிய டாஷ்கண்டை நெருங்கியது தெரிந்தது.

டாஷ்கண்ட், இந்திய வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டதல்லவா? நல்ல இடத்தையும் பெற்று விட்டது. ஆயிரத்து கொள்ளாயிரத்து அறுபத்தைந்தில், பாகிஸ் தானத்திற்கும் இந்தியாவிற்கும் போர் மூண்டது. இரு நாடுகளுக்கு மிடையில் சமாதானத்தை ஏற்படுத்த,

சோவியத் அரசு முன் வந்தது. அன்றைய சோவியத் பிரதமா கோவி.ஜின் அரும்பாடுபட்டு, அன்றைய

பாகிஸ்தான் அதிபர் அயூப்கானேயும் இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியையும், டாஷ்கண்ட் நகரில், சந்தித்துப் பேச வைத்து, இரு நாடுகளுக்கும் அமைதி ஒப்பந்தம் ஏற்படச் செய்தார். இதன் மூலம் டா விகண்ட் இந்திய வரலாற்றில் பதிந்து விட்டதை எண் ணி உவந்தேன், வானவூர்தியில் பறந்து கொண்டே.

மின்னல் வேகத்தில் எண்ணம் ஒடிற்று. லால்பகதுர் சாஸ்திரி-ஆம்.

நம் பிரதமர் சாஸ்திரி அமைதி உடன்படிக்கை செய்து கொண்ட அதே டாஷ்கண்டில், வெற்றியைக் கொண்டாடுவதற்கும் வாய்ப்பில்லாமல், இ ய ம் ைக யெய்திய சோக நிகழ்ச்சி மின்னிற்று. சோகம் என்னே உலுக்கிற்று. சில கிமிட உலுக்கல். வருந்திப் பயன் என்ன என்று கேட்டது என் மனமே.

'ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண் டார் வருவரோ மாநிலத்திர்.' பழைய காலப் ப ண்டிதர் எனக்குக் கற்றுக் கொடுத்த இப் பழம் பாடல், ஆறுதல் ஊசி போட்டது. வெற்றிக் களிப்பும் அதிர்ச்சி மயக்கமும்