பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

சாதாரண குடும்பத்தில் பிறந்த சாஸ்திரி - இந்தி :பாவின் பிரதமரானது அவருக்கு மட்டுமல்ல, சிறப்பு : இந்தியாவிற்கும் சிறப்பு : சுதந்திரத்தின் இன்றியமை யாமைக்கு சின்னம். மெய்யான, உரிமை பெற்ற, மக்கள்ாட்சி தான், குடிமக்கள் ஒவ்வொருவரிடமும் .மறைந்து கிடக்கும் ஆற்றலை மலரச் செய்து மணக்கச் செய்து, பயன்படச் செய்யும். மாருக. சுதந்திரமில்லாத நாட்டிலே, ஆவியங்குண்டோ, ஆக்கமுண்டோ, காவிய முண்டோ கலேகள் உண்டோ என்று கவி பாரதி, கண்ணிர் விட்டதில், எத்தனை உண்மையிருக்கிறது. என்று தெளிந்தது, என் சிந்தனே. அரசியல் சுதந்திரத்தின் பெருமையை உணர்ந்தேன். அறியாமையிலிருந்து விடுதலை பெற்று, சமுதாய திே பெற விரைய வேண்டாவா என்று கேட்டது உள்ளம். ஆமாம் என்றது. அதுவே. இக் காலத்தில், விரைந்து பொருளாதார மறு வாழ்வை ஏற்படுத்தா விட்டால், அரசியல் சுதந்திரம் ஆட்டங் கண்டு விடுமென்று அச்சுறுத்திற்று நெஞ்சு.

'அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என்ற குறட் பாவின் பகுதி தடம் காட்டிற்று. ஆமாம் ; வறுமை - அதன் விளைவான பட்டினி - அதற்ை பொங்கியெழும் வெறுப்பு - வெகுளி - வன்முறை ஆகியவற்றின் கொடு மைக்கு அஞ்சுவது, அறிவாளிகளின் தொழில். அவற்றை முளையிலே கிள்ளி எறிய வழிவகை சொல்வது, சொல்வ தோடு கில்லாமல், ஆக்க முயற்சிகளின் மூலம் வறுமை யைத் துடைக்கத் துணை நிற்பது - தோள் கொடுப்பது, கற்றவர் கடமை என்று ஒப்புக் கொண்டது என் உள்ளம்.

'ஒப்புதல் வேரூன்ற வேண்டும் சிந்தனே தாவக் கூடாது' என்பது போல், அறிவிப்பு ஒன்று கருத்தோட் டத்தைத் தடுத்து நிறுத்திற்று.