பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

அரசால் அனுமதிக்கப்பட்ட தொகையே. அத்தொகை யையும் ஒவ்வொருவர் 'பாஸ்போர்டிலும் குறிக்கப்பட்டி ருந்தது. மடியில் கனமில்ல; வழியில் பயமில்லை என்ற தென்பில், சுங்க கமுனுக்களேப் பூர்த்தி செய்து, கையெழுத்

1.நின்ருேம்.

வெளி நாட்டுப் பயணத்தைப் பொருத்த மட்டில் எங்கள் மூவரில், நானே அனுபவசாலி. அதுவும் சோவியத் நாட்டிற்கு ஏற்கனவே இருமுறை சென்று வந்தவன். எனவே, எங்கள் கணிக்கை முறை வந்த போது, அனுபவத் துணிச்சலால் மற்ற இரு தோழர்களுக்கு முந்தி நான் சென்று, டெலிகேவுன் அதாவது துதுக் குழு என்று அறிவித்தேன்.

டெலிகேஷன்' என்று திருப்பிச் சொன்னுர் சங்க அதிகாரி. சொல்லி விட்டு வேருெரு :ேசையண்டை எங்களே அழைத்துச் சென் முர். அங்கிருந்த அதிகாரியிடம் டெலிகேவுன் என்று அ. முகப்படுத்தி, எங்களே ஒப்படைத்து விட்டுச் சென் ருர்,

அங்கே சென்று கின்றதும், இந்திய துரதுக் குழு' என்று கான் ஆங்கிலத்தில் சொன்னேன். அதிகாரி, தம்மிடமிருந்த பட்டியக்லப் பார்த்தார். எங்கள் மூவர் பெயரையும் ஒவ்வொன்ருகப் படித்தார். பெயரைப் படிக்கப் படிக்க, அது யார் என்று அடையாளம் காட்டிக் கொண்டோம். கையிலிருந்த சுங்க கமூளுவைக் கொடுத் தேன். தாதுக்குழுவிடம் சுங்க உறுதிமொழி பெறுவது இக்காட்டின் வழக்கமல்ல. இது தேவையில்லை" என்று ஆங்கிலத்தில் கூறியபடியே, என் உறுதிமொழிச் சீட்டைக் கிழித்து. கூடையில் போட்டார். மற்ற இருவரது சீட்டு களுக்கும் அதே கதி.

எங்கள் பெட்டிகளை அடையாளம் காட்டச் சொன்னர். அவற்றின் மேல் சட்டென்று சங்கக் குறியிட்டு விட்டு, நீங்கள் போகலாம் என்ருர் அதிகாரி.