பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

டாஷ்கண்டில் எங்கள் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்ள வேண்டியவரின் முகவரியை அதிகாரியிடம், காட்டினேன். அதைக் கண்டதும், அங்கிருந்த ஒரு. அம்மையாரை அழைத்து, அவரிடம் எங்களே ஒப்படைத்து உரியவரிடம் சேர்த்து விடும்படிக் கூறினர். -

விமான நிலையத்தின் மேன்மாடியில் பயணிகள் தங்கும் கூடம் உள்ளது. அங்கே அழைத்துக் கொண்டு போய் உட்கார வைத்தார். எங்கள் எதிரிலேயே, யாருக்கோ டெலிபோன் செய்தார். பல முறையும் கூப்பிட்டும் அந்த தொலைபேசி எண் கிடைக்கவில்லை. யாருடனுே பேசிக் கொண்டிருந்தது. அம்மையார் சளேக்கவில்லை. முகத்தில் எரிச்சல் குறியும் இல்லை. அவரது பொறுமையை வியந்து கொண்டே நாங்கள் உட்கார்ந்திருந்தோம்.

திடீரென எங்கள் அருகில் ஆங்கிலம் கேட்டது. திரும்பிப் பார்த்தோம்.

'காலதாமதத்திற்கு மன்னிக்கவும். ஐந்து மணி தாமதமாக விமானம் வந்து சேரும் என்று சொன்னர்கள். அதை அப்படியே நம்பி விட்டு, அலுவல்களில் மூழ்கி விட்டோம். விமானமோ சிறிது முந்தி வந்து விட்டது. அச் செய்தி எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்டதும் ஒடோடி வருகிருேம். நீங்கள் காத்திருக்க நேர்ந்ததைப் பற்றி வருந்துகிருேம்.

"இதோ, வெளிநாடுகளோடு பண்பாட்டு உறவு கொள்ளும் சோவியத் கழகத்தின், டாஷ்கண்ட் கிளேயின் துணைத் தலைவர்' என்று அறிமுகப்படுத்தினர், முதலில் எங்களிடம் பேசியவர். அறிமுகப்படுத்தியவர் ஆங்கில மொழி பெயர்ப்பாளர்.

'கால தாமதத்தால் எங்களுக்கு இடையூறு ஏதும் ஏற்படவில்லை, ஆகவே வருந்தத் தேவையில்லை" என்று சமாதானப்படுத்திக் .ெ கா ண் டே ஒவ்வொருவராக, டாஷ்கண்ட வாசிகள் இருவரோடும் கை குலுக்கிைேம். அதைக்கண்ட அம்மையார் தொலைபேசியை விட்டுவிட்டு: எங்களிடம் வந்தார்.