பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

விளைவாக சோவியத் ஆட்சி ஏற்பட்டது. அப் புரட்சி துருக்கிஸ்தானத்திலும் வெடித்தது. அது சிற்றரசர்களே நீக்கி விட்டு சோவியத் ஆட்சியை இப் பகுதிக்குள் கொண்டு வந்தது. தொடக்கத்தில் துருக்கிஸ்தான் என்ற பெயரில் இங்கு குடியரசு ஏற்பட்டது. இந் நூற் ருண்டின் இருபத்து நான்காம் ஆண்டே, இக் குடியரசு, 'உஸ்பெக்கிஸ்தான்' என்ற பெயரைப் பெற்றது. அது முதல் சோவியத் குடியரசாக, சோவியத் ஒன்றியத்தில் வளர்ந்து வருகிறது.

உஸ்பெக் குடியரசின் மக்கள் எண்ணிக்கை எவ்வளவு? ஒரு கோடியே இருபது இலட்சம். சோவியத் ஆட்சியில் மக்கள் கட்டுப்பாடு இல்லை. மாருக,அவர்கள் எண் ணிைக்கை பெருகுகிறது. இக் குடியரசில் விாழும் அனைவரும் உஸ்பெக் இனமா? இல்லை. உஸ்பெக் இனத்தவர்' மூவரில் இருவர்; மற்றவர் சிறுபான்மை இனத்தவர். ஏறத்தாழ நூறு சிறுபான்மை இனங்கள் இக் குடியரசில் வாழ்கின்றன. சிறுபான்மையோர் தங்கள் தங்கள் மொழி வளர்ச்சிக்கும் ஆதரவு பெற்று ஒற்றுமை யாக வாழ்கிருர்கள்.

முற்காலத்தில் உஸ்பெக்கிஸ்தான் மக்களின் கிலே என்ன? ஒரு சிலர் மட்டுமே பணக்காரர்கள். அவர்கள் வீடுகள் அழகாக இருக்கும். அவ் வீடுகளின் உள்ளே இரத்தினக் கம்பளங்கள் விரிக்கப்பட்டிருக்கும். சுவர்களை ஒவியங்கள் அழகு படுத்தும். அக்காலத்தில் பொது மக்கள் ல என்ன? அவர்களது உடமை மண் வீடு: அதுவும் ஒரே அறையுள்ளது. அதிலேயே சமையல்: அங்கேயே படுக்கை; ஒரு பாதியில் திரைக்குப் பின்னல் பெண்கள்; மற்ருெரு பாதியில் ஆண்கள்: இப்படிக் குடியிருந்தார்கள்.