பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

ஆணிலும் கருணையுள்ள உயிர். ஆணிலும் தியாக மிக்க உயிர்.

ஆண்களோடு சரிநிகர் சமானமாக வாழ வேண்டிய வர்கள் பெண்கள். ஆண்களுக்கு அடிமைகளாக இருக்கப் பிறந்தவர்கள் அல்லர் பெண்கள். ஆண்களைப் போலவே கற்றுத் தேர்ந்து, வாழ வேண்டியவர்கள் பெண்கள். 'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் கடத்த வந்தோம். இது பாரதியின் கனவு. முறையான கனவு. பலிக்க ண்டிய கனவு. மானு டத்தின் பல்வேறு பணிகளிலும் பங்கு கொண்டு விளங்க வேண்டியவர்கள் பெண்கள். அடிமையாக அல்லாது, வாழ்க்கைத் துணையாக இருந்து முழுமை பெற வேண்டி யவர் பெண்மணி.

குரப்பிள்ளைகளின் தாய்களாக விளங்க வேண்டிய பெண் குலத்தின் கிலேயென்ன? அறிவுச் சுடர்களை அளிக்க வேண்டிய தாய்க் குலமே உன் கிலேயென்ன? நெஞ்சு பொறுக்குதில்லையே உங்கள் தாழ் நிலையை எண்ணி விட்டால்.

"பெண்டாட்டிதனே அடிமைப் படுத்த வேண்டி, பெண் குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ?" ஆகர்து ஆகாது இக் கொடுமை. "கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்தி காட்சி கெடுத்திடலாமோ? கூடாது; கூடாது. ஆலுைம், உலகின் பல பகுதிகளில் மானுடம் இக் கொடுமையைப் புரிந்து வருகிறது. அங்குள்ள பெண் களின் கிலே என்ன?

அலங்காரப் பொம்மைகள் பெண்கள். நல்ல நகை தாங்கிகள் பெண்கள். மலிவான வீட்டு வேலையாட்கள் பெண்கள்; நல்ல சமையல் ஆட்கள், பெண்கள்; இனப் பெருக்கச் சாதனங்கள், பெண்கள். இப்படி, சமுதாயத்தின்