பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைவேந்தர் உயர்திரு சுந்தரவடிவேலு அவர்கள் சோவியத் ஒன்றியத்துக்குச் சென்று வந்து அங்கு, தாம் கண்டவற்றை அற்புதமான கட்டுரை வடிவில் வாரா வாசம் தினமணி கதிரில் எழுதி வந்தார்கள். அவை மிகப் பயனை கட்டுரைகள் என்பதை உணர்ந்து புத்தகமாக வெளியிட விரும்பினேன். அன்போடு அனுமதியளித் கார்கள். சோவியத் மக்களின் பண்பாட்டையும், பமுக்க வழக்கங்களையும் சோவியத் மண்ணின் மணத்தையும் தமக்கே உரிய எழுத்தாற்றலால் நாம் கண்டு, கேட்டு

அநுபவிக்கச் செய்துவிட்டார்கள் இந்நூலின் மூலம். இதற்காகத் தமிழ்மக்கள் திரு. சுந்தரவடிவேலு அவர் களுக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளார்கள்.

பிரயாண நூல்கள் தமிழில் மிகக் குறைவாகவே வெளிவந்துள்ளன. அதை ஈடு செய்யும் இணையற்ற காலாக இந்நூல் தமிழில் மலர்ந்துள்ளது.

- வாசகர்கள் போற்றிப் புகழ்வார்கள் என்பதில் .ஐயமில்லை. இந்நூலே வானி தி பதிப்பக வெளியீடாக வெளியிட அநுமதியளித்த துணைவேந்தர் சுந்தரவடிவேலு -ணவர்களுக்கு வணக்கத்தோடு கூடிய நன்றி உரித்தாகுக.

ஏ. தி ரு நா வுக் கர சு வானதி பதிப்பகம்