பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

ஒரு பகுதியினரை. முகமூடிக்குள், மறைத்தோ மறைக காமலோ இருட்டில் வாழச் செய்து, உலகம் அறியாமல் அல்லல் பட வைத்ததன் பலன் என்ன? இயற்கை அறிவு வளர்வதற்கு வழியின்றி, உள்ளிருக்கும் ஆற்றல் பயன்பட வாய்ப்பின்றி, பிள்ளை பெற்று வளர்ப்பதோடு முடிந்தது கோடி கோடி பெண்களின் வாழ்க்கை. புரட்சிக்கு முன்பு உஸ்பெக்கிஸ்தானத்தில், பெண்களின் பிழைப்பும் இப்படியே.

'நல்ல விலை கொண்டு காயை விற்பார்; அந்த நாயிடம் யோசனை கேட்பதுண்டோ? கொல்லத் துணி வின்றி நம்மையும் அங்கிலே கூட்டி வைத்தார்; பழி கூட்டி வைத்தார்.' இப்படி இரங்குகிருர் தேசிய கவி பாரதி யார். இது நம் நிலைக்கு எவ்வளவு பொருத்தமோ அவ்வளவு பொருத்தமாயிருந்தது, துருக்கிஸ்தானத்திலும். இரஷ்யாவில் எழுந்த அக்டோபர் புரட்சி ஜார் மன்னரின் கொடுங்கோல் ஆட்சியைத் துக்கி எறிந்ததோடு நிற்கவில்லை. ஒரு பிரிவினர் மற்ருெரு பிரிவினருக்கு இழைத்து வந்த கொடுமைகளையும் அது சாய்த்து விட்டது. ஆணினம் பெண்ணினத்தை அடிமைப்படுத்தி அடக்கி, ஒடுக்கி வைத்திருந்த அவலம் அதனல் அழிந்து விட்டது. இன்று உஸ்பெக்கிஸ்தானத்திலும் சரி; பிற சோவியத் குடியரசுகளிலும் சரி; எங்கும் ஆண்களும் பெண்களும் ஓர் நிறை. எல்லார்க்கும் சம வாய்ப்பு. க்ற்றுத் தேற சம வாய்ப்பு, தொழில் புரிய சம வாய்ப்பு: அலுவல் பார்க்க சம வாய்ப்பு: ஆளச் சம வாய்ப்பு. சட்டங்கள் செய்யச் சம வாய்ப்பு. சம வாய்ப்பு ஏட்டிலா

நாட்டிலா? ஏட்டிலும் காட்டிலும் சம வாய்ப்பு.

எங்கெங்கு காணினும் பெண் களடா என்று முழங்க

வேண்டும் போல் தோன்றும் சோவியத் மண்ணில்

அத்தனே பணிகளில் அலுவல்களில் தொழில்களில்

சோ-3