பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

சோவியத் பெண்கள் ஈடுபட்டுள்ளார்கள், வெற்றி

பெற்று விளங்குகிருர்கள்.

சோவியத் நாட்டில் ஆசிரியத் தொழில் பெண்கள் கையில். அவர்கள் விட்ட மிச்சமே, ஆண் ஆசிரியர்களுக்கு. மருத்துவத் துறையின் நிலையென்ன? அங்கும் ஆண்களே மிஞ்சிவிடுகிரு.ர்கள், பெண்கள். இசையும் கூத்தும் எப்படி? இவை கூட பெண்களின் தனி உடைமை. விஞ்ஞானத் துறையிலும் பெண்களுக்குக் குறைவில்லை. அலுவலகங்களில் மட்டுமா அவர்கள் மொய்த்துக் கொள்ளுகிருர்கள்? தொழிற்கூடங்களில் வேலே செய்யும் பெண்களும் எண்ணற்றவர்கள்.

அறிவு சார்ந்த அலுவல்களில் ஆண்களுக்குச் சமமாக. ஏன் அவர்களுக்கும் மேலாக, சோவியத் பெண்கள் விளங்குவதோடு, முரட்டு உடலுழைப்புத் தொழில் களுக்கும் அங்காட்டுப் பெண்கள் சளைப்பதில்லை. வாடகைக் கார் ஒட்டும் பெண்களே, பத்தாண்டுகளுக்கு முன்பு, நான் சோவியத் நாடு சென்ற போது, காண நேர்ந்தது. நெடுஞ்சாலையின் பழைய தார்ப்பாளங்களேத் தோண்டியெடுத்துவிட்டு, புதிய பாதைகளே அமைக்கும் கடினமான வேலைகளைப் பெண்கள் செய்யச் சுணங்கு வதில்லை. அத்தகைய உடலுழைப்பைத் தாங்கும் வலிமை உண்டு சோவியத் பெண்களுக்கு.

சோவியத் மகளிரின் இலட்சியம், அசைந்தாடும் மலர்க் கொடிகளாக இருப்பதல்ல; காட்சிப் பொருள் களாக விளங்குவதல்ல. பயனுள்ள குடிமக்களாக வாழ்வதே அவர்களுடைய இலட்சியம். அதற்கேற்ற உடல் வலிமையையும் மூளை வளர்ச்சியையும் பண்பட்ட உள்ளத்தையும் பெறுவதிலே காட்டமுடையவர்கள், சோவியத் பெண்கள். -