பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

சோவியத் காட்டு ஆண்கள் பெரும்பாலோர் வாட்டஞ்சாட்டமாக வளர்ந்தவர்கள். அவர் க ளி ல் கோஞ்சான்களே யாரும் இலர். ஆண்களைப் போன்றே பெண்களும் நன்ருக வளர்ந்தவர்கள்; வலிமையுடைய வர்கள், அச்சமற்றவர்கள். அவையே அவர்களுக்குத் தற்காப்பு.

அலுவலகங்களில் அவர்கள்; தொழில்களில் அவர்கள்: அரசியலில் அவர்களுக்கு என்ன பங்கு நல்ல பங்கே.

உஸ்பெக்கிஸ்தான் குடியரசின் தலைவர் யார் தெரியுமா? ஒரு அம்மையார். அவர் பெயர் என்னவோ? யத்கார் காஸ்ரெடிைேவா என்பது அவர் பெயர். அவர் கதை சுவையானது. அவர் காலாகாலத்தில் பள்ளிக்குச் சென்ருரா? இல்லை. எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டது எப்போது? பதினேராவது வயதில். அதுவரை பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு இல்லை. ஆயினும் கருத்தாகக் கற்ருர், ஆர்வத்தோடு படித்தார்; கன்ருகத் தேறினர். தொழில் புரியும் வயது வந்ததும், தொழில் புரிந்து கொண்டே. பகுதி நேரம் படித்து உயர்நிலப்ப்ள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் பொறியியல் கல்லூரியில் படித்து வெற்றி பெற்ருர். அக் குடியரசின் பெரிய பாசன வாய்க்கால் திட்டத்தின் பொறுப்பையேற்று பணி புரிந்தார். பின்னர், கட்டடப் பொருள்கள் தொழிலுக்கு அமைச்சரானர். எல்லா நிலைகளிலும் நல்ல பணிபுரிந்தார். எனவே துணைப் பிரதமரானர். பின்னர் உஸ்பெக்கிஸ்தான் குடியரசின் தலைவரானர்.

வெளியே, முகமூடியின்றி, வந்த பெண்ணைத் தீயிலிட்டுப் பொசுக்கிய அங்காள் உஸ்பெக்கிஸ்தானத்தின் இக்காள் குடியரசுத் தலைவராக, ஒரு அம்மையார் வந்தது, சென்ற காலக் கொடுமைக்குச் சரியான பழிவாங்கல் அன்ருே!