பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

பழக்கம் கொடியது. பழக்கம் எளிதாக ஏற்பட்டு விடும். அதை விடுவதற்கோ அரும்பாடுபட வேண்டும். நான்கு நாட்களில் வளர்ந்து விட்ட பழக்கம், பதின்ைகு நாட்கள் நோன்பிருந்தாலும் போவது அரிது. தனி மனிதனுக்கு மட்டுமா இக் குறை? சமுதாயத்திலும் இக் குறை உண்டு.

பழக்கக் கொடுமைக்கு ஆளான இலட்சக் கணக் கானவர்கள் கொண்டது தானே சமுதாயம்? சமுதாயப் பழக்கங்களில் ஒன்று, தேவையற்ற தீங்காக மாறின பிறகும், அதைக் கைவிட்டு விட, சமுதாயம், எளிதாக ஒப்புக் கொள்வதில்லை. மாற்ற வேண்டிய நேரம் வந்தும், பழைய பழக்கத்தையே உடும்புப் பிடியாகப் பற்றிக் கொண்டு தவிக்கிறது, மக்கள் இனம். பல நூற்ருண்டுகளாக வேரூன்றி விட்ட பழக்கமாயிருப்பின்