பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

அாதுக் குழுவினர் மூவரும் அங்கு பதிவு செய்து கொண்டோம். எங்கள் பாஸ்போர்ட்டுகளைப் பார்த்து விட்டு, பத்திரமாக வைத்துக் கொண்டார்கள். எங்கள் அற்ைகளின் சாவிகளைப் பெற்றுக் கொண்டோம். தானுயர்த்தி (Lift) மூலம் எங்கள் அறைக்குச் சென் ருேம்.

'கை கால்களைக் கழுவிக் கொண்டு. ஆயத்த மானதும், இரவு உணவருந்தச் செல்லலாம் என்று கூறிவிட்டு, உள்ளுர்த் தோழர்கள் விலகிக் கொண்

டார்கள்.

அறையின் அமைப்பும், ஒழுங்கும் பழைய மாதிரியே இருந்தன. இடைப்பட்ட பத்தாண்டுகளில் மாறு,கலக் காணவில்லை. இடைக்காலத்தில் ஏற்பட்ட கில அதிர்ச்சி யால் ஒட்டலில் எத்தகைய மாறுதலும் நேராதது எனக்கு வியப்பாக இருந்தது.

கடன்களே முடித்துக் கொண்டு, இராச்சாப்பாட் டிற்கு மூவருமாகச் சென்ருேம். எங்களுக்காகக் காத் திருந்த உள்ளூர்த் தோழர்கள் எங்களே அழைத்துச் சென் ருர்கள். ஒட்டலில் தரை மட்டத்தில், ஒர் கோடியி லிருக்க உணவுக் கூடத்திற்குச் சென்று ஒர் மேசைபைச்

சுற்றி அமர்ந்தோம்.

பரிமாறுவோர். வந்து, எங்களுக்கு வேண்டியவற் றைக் கேட்டுத் தெரிந்து கொண்டு போவதற்கு முன், தோழர்களோடு உரையாடினுேம். உணவு உண்டு கொண்டே பேசினேம். பல தகவல்கள் கிடைத்தன. உணவருந்தும் வேளே வயிற்றுப் பசியாற்றும் வேளை மட்டுமல்ல; உரையாடி, அறிவுப் பசியாற்றிக் கொள்ளும் வேளேயும் அதுவாகும். இதுவே மேனுட்டார் நடை முறை.