பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49;

செய்து, தேவைகளே நிறைவேற்றி வைக்கும் பொறுப்பு களே, குடியரசுகள் பகிர்ந்து கொண்டன. கட்டப் பொருள்களே, வண்டி வண்டியாக அனுப்பி வைத்தன குடியரசுகளும். கட்டட வல்லுனர்களே அனுப்பி راه உதவிய குடியரசுகள் உண்டு. - - பொருள்கள் வந்து குவிந்தன, டாஷ்கண்டில். ஆற்றல் மிக்கோர் வந்து குவிந்தனர் டாஷ்கண்டில். ஆயிரம் ஆயிரம் ஒளிகொள் விழியில் இறக்கை கட்டி பறந்து பறந்து, பணி புரிந்தனர். செவ்வி அருமையும் பாராது. கருமமே கண்ணுயிருந்து தொண்டு செய்தனர் எல்லோரும். சோதனைக்குட் பட்டவர்கள், சாதனையாளராக வெளி வந்தனர். சில மாதங்களிலேயே, கூடாரங்களில் இருந் தவர்கள். மாடி வீடுகளில் குடியேறி விட்டனர். கூடித். தொழில் புரிந்தால், கோடித் தொல்லைகளையும் ஒட ஒட விரட்டி விடலாம் என்பதை அன்று சோவியத் மக்கள் ெேசய்து காட்டி விட்டார்கள்.

டாஷ்கண்டைச் சீரமைக்க வந்தவர்கள், ஒவ்வொரு பகுதியாகப் பங்கு போட்டுக் கொண்டு, அங்குள்ள கட்டட வேலைகளை மேற் கொண்டார்கள். எந்தெந்த வட்டத்தை, எங்தெந்த ஊரார் கட்டி முடித்தார்களோ அந்தந்த வட்டத்திற்கு அந்தந்த ஊரின் பெயரை, டாஷ் கண்ட் மக்கள் சூட்டிக் கொண்டார்கள். மாஸ்கோ வாசிகள் உதவி, கட்டிக் கொடுத்த வட்டத்திற்கு "மாஸ்கோ' என்ற பெயர் இருக்கும். டாஷ்கண்டின் வேருெரு வட்டத்தில் ஜார்ஜியா என்ற பெயரைக் காணக்கூடும். அதன் பொருள் என்ன? அந்த வட்டம் ஜார்ஜிய உதவியால் அமைக்கப்பட்டது என்று ப்ொருள். முதியவர்கள் உதவியதைப் போலவே, இளைஞர்களும் முன் வந்து உழைத்து உதவினர்கள். 'கம்ஸோமால்' என்றழைக்கப்படும் இளம் கம்யூனிஸ்டுகள்', சாதாரண