பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

காலங்களில் கூட, விடுமுறை நாட்களில், சாலையமைத்தல்: பூங்கா அமைத்தல், குளம் வெட்டுதல், பொதுக் கட்டடங்களைக் கட்டுதல் ஆகிய பொதுத் தொண்டு களில் ஈடுபடுகிருர்கள். விடுமுறை நாட்களில் மட்டுமே. அப்படி ஈடுபடுவதால், அவர்கள் கல்விக்குச் சிதைவு, ஏற்படுவதில்லை. தங்கள் தங்கள் பகுதியைத் தங்கள் கூட்டு முயற்சியால் வளப்படுத்தியதால் ஏற்படும் பொறுப்புணர்ச்சியும் தன்னம்பிக்கையும் சமாளிக்கும் திறமையும் இளைஞர்களிடம் வளர்வதற்கு இத்தகைய பொதுப் பணிகள் உதவியாகின்றன.

முதன் முறை டாஷ்கண்டிற்குச் சென்றிருந்த போது, நான் இளைஞர்கள் அமைத்த ஏரியையும் பூங்காவையும் கண்டு மகிழ்ந்தேன். இது இளைஞர்களுடைய சமுதாயத் தொண்டு; தொழில் அல்ல. ஆகவே கைமாறு பெறுவ தில்லை. டாஷ்கண்டில் ஏரி அமைத்தது போல், ஜார்ஜி யாவின் தலை நகரான பிலிஸி நகரத்தில், பரந்த மலேப் பூங்காவொன்றை அவ்வூர் இளைஞர்கள் அமைத்திருந்ததை நான் நேரில் கண்டேன். இருபதாயிரம் இளைஞர்கள் சேர்ந்து அதை அமைத்தார்களாம். எவ்வளவு காலம் பிடித்தது என்று கேட்டதில் இருபது வாரங்கள் விடுமுறை நாட்களில் உழைத்து அதை முடித்தார்கள் என்று தெரிந்து கொண்டேன். அவ்வேலைக்கு வேண்டிய கருவிகளை உள்ளூர் ஆட்சி அனுப்பியது. வல்லுனர்களே

யும் வழிகாட்டிகளையும் உள்ளாட்சியே உதவியது. உழைப்போ இளைஞர்களுடையது. வேலை நாட்களில், தங்கள் தங்கள் உணவை, வீட்டிலிருந்தே கொண்டு

வருவார்களாம் இளைஞர்கள். இதைக் கேட்ட போது, கம் நல்ல சிற்றுார்களில், ஆற்றுக்கால் செப்பனிட சொக்க சாப்பாட்டோடு, செல்லும் பழக்கம் கினேவிற்கு வந்தது.

மாஸ்கோ நகரிலுள்ள, இளங் கம்யூனிஸ்ட் மாளிகையை அமைப்பதிலும் இளைஞர்கள் ஈடுபட்டு