பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

""

ಭಾ(ರಾ.

உலகத்தின் முதல் சமதர்ம நாடு சோவியத் ஒன்றியம் ஆகும். முதல் சமதர்ம நாடு முதல்தரமான நாடாகவும் விளங்குகிறது.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பதினேழாம் ஆண்டு அக்டோபர் திங்கள் யுகப் புரட்சியொன்று நிகழ்ந்தது. இரஷ்யாவில் நிகழ்ந்து உலகத்தை உலுக்கிய அப்புரட்சி, அரசியல் புரட்சி மட்டுமன்று பொருளாதாரப் புரட்சி யாகவும் சமுதாயப் புரட்சியாகவும் உருவெடுத்தது. அப்

புரட்சி. f

அன்றைய இரஷ்யாவில் வெடித்த அப்புரட்சி, ஜார் மன்னராட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அது மட்டுமா? முதலாளித்துவ முறையை எடுத்தெறிந்துவிட்டு, சமதர்ம: முறையை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. சமதர்ம! ஆட்சி, சமுதாயத்திலுள்ள ஆண் பெண் அனைவரையும்! முன்னறியாப் பெருநிலைக்கு வளரவைத்து விட்டது.

'பாட்டாளி ஆட்சியாவது; பாரில் நிலப்பதாவது, என்று நினைத்து இரஷ்யாவில் உள்நாட்டுக் குழப்பங்களே. வளர்த்த ஆதிக்கவாதிகள் எண்ணற்றவர்.

முதல் சமதர்ம பாட்டாளி ஆட்சியை முறியடிக்க, விட்டால், பல நாடுகளுக்கும் அம்முறை பரவிவிடும். என்றஞ்சி பதின்ைகு அயல் அரசுகள் புதிய சோவிய்த் ஆட்சியைத் தாக்கின. அவர்கள் கண்டதும் தோல்வியே