பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

8,750,000 ஏக்கர்கள். நாற்பதாயிரம் டிராக்டர்கள் இவற்றில் பயன்படுகின்றன. எட்டாயிரம் லாரிகள் ஒடுகின்றன. இப் பண்ணைகளில் கால்நடை வளர்ப்பும்

பால் பண்ணேகளும் உண்டு.

மற்ருெரு வகை பண்ணே கூட்டுப் பண்ணே. இவை கூட்டுறவு முறையில் கடக்கின்றன. 950 கூட்டுப் ப ண் ண க ள் உஸ்பெக்கிஸ்தானத்தில் இருப்பதாகத் தெரிந்து கொண்டோம். கூட்டுப் பண்ணேயின் சராசரி பரப்பு 5000 ஏக்கர்கள்.

டிராக்டர்கள் எங்கிருந்து வருகின்றன என்று கேட்டோம். உஸ்பெக் குடியரசில் பெரிய டிராக்டர் தொழிற்சாலை இருப்பதை கினைவுபடுத்தினர்கள். நவீன வேளாண்மைக்கு வேண்டிய கருவிகள் செய்யும் தொழிற் சாலைக்குப் பேர்போனது இக் குடியரசு.

சோவியத் நாட்டின் பெரிய பஞ்சாலைகள் பல உஸ்பெக்கில் இருப்பதையும் தெரிந்து கொண்டோம். மின்சாரம் உண்டா? அதற்கென்ன குறை. புதிதாக அமைக்கப்பட்ட தேக்கங்களில் மின்சார உற்பத்திக்கும் போதிய வசதி செய்துள்ளார்கள். ஆண்டுக்கு ஆண்டு மின்சார உற்பத்தியும் வளருகிறது.