பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

ஒரு நெடுஞ்சாலை வழியாக காங்கள் விரைந்து போய்க் கொண்டிருந்தபோது பெரியதொரு மாடிக் கட்டடத்தைச் சுட்டிக் காட்டினர்கள். அதோ தெரிகிறதே, அக் கட்டடத்தில், இந்தியாவும் பாகிஸ்தானும் டாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது' என்று கூறினர்கள்.

டாஷ்கண்ட் ஒப்பந்தம் ஏற்படுவதற்கு உதவிய சோவியத் காட்டிற்கு இந்தியா நன்றியுள்ளதாக இருக் கிந்து என்று சொன்னுேம் தோழர்கள் மகிழ்ந்தார்கள். கம் பிரதமர் லால்பகதுரர் சாஸ்திரி தங்கியிருந்த இடம் எதுவென்று கேட்டோம். பதினேந்து கிலோ மீட்டருக்கு அப்பால் இருப்பதாக பதில் வந்தது. இவ்வளவு தூரம் வந்து, அதைப் பார்க்காமல் போகலாமா வென்று கெஞ்சம் துடித்தது. எங்கள் ஆசையை, அாதுக் குழு உறுப்பினர், பீகாரின் முன்ள்ை பொதுப்பணித்துறை அமைச்சர், திரு யாதவ், டாஷ்கண்ட் வாசிகளிடம் கூறினர்.

டாஷ்கண்ட் தோழர், மணியைப் பார்த்தார். இரவு எட்டரை மணி என்பதை கைக்கெடிகாரங்கள் காட்டின. 'ஏமாந்து விட்டோமே. உணவு அருந்துவதற்கு முன்னரே அங்கு போய் வந்திருக்கலாம். இப்போது அக் கட்டடம் திறந்து இருக்காது. அவ்வளவு தூரம் சென்றும் பயனில்லை.

"மாஸ்கோவில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பின்னர் இங்கு திரும்பி வருவீர்கள். அப்போதைய கிகழ்ச்சி நிரலில், சாஸ்திரி தங்கியிருந்த இடத்தைப் பார்ப் பதையும் சேர்த்து விடுகிருேம்.

"சாமர்கண்ட் நல்ல அழகிய ஊர். தைமூரின் தலைநகரம். அவர் கட்டிய அழகிய தொன்மையான கட்டடங்கள் அங்கே உள்ளன. அவற்றையும் நீங்கள்