பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
68



எங்களை மாஸ்கோவிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யும் படி இன்டுரிஸ்ட்டிடம் கூறிவிட்டு, சிற்றுண்டிச் சாலைக்கு அழைத்துச் சென்ருர். நல்ல சிற்றுண்டி கிடைத்தது: விரைந்து உண்ண நேர்ந்தது. பரபரப்போடு உண்டு: முடித்து விட்டு, பயணிகள் தங்கும் கூடத்திற்கு வந்தோம்: மாஸ்கோ விமானம் புறப்பட பதினைந்து நிமிடங்கள் இருந்தன. நிம்மதியாக அமர்ந்திருந்தோம். மணி எழு ஆயிற்று. புறப்படும் தகவல் இல்லை. எங்கள் வழிகாட்டி விசாரிக்கச் சென்ருர். சில விடிைகளில் அறிவிப்பு வந்தது. என்ன அறிவிப்பு?

"மாஸ்கோவில் பெரும் பனி பெய்கிறது. வழியிலும் வானநிலை சரியாக இல்லை. எனவே விமானம் புறப்பட நேரமாகும். அடுத்த அறிவிப்பை எதிர்பாருங்கள்" என்று சொன்னபோது, எங்களுக்குப் பொக்கென்று போயிற்று.

"பொறுமையைக் கற்றுக் கொள்ள இந் நெருக்கடி உதவட்டும்" என்று எங்களைத் தேற்றிக் கொண்டு காத்திருந்தோம். கடைசியில், புறப்படும் அறிவிப்பு வந்தது. கூடத்தை விட்டு வெளியே வந்தோம். விமானம் நெடுந் தூரத்தில் இருந்தது. பேருந்து வண்டியில் ஏறி அங்கே சென்றோம். வரிசையில் நின்று மெல்ல ஏறினுேம். உரிய இடத்தைத் தேடி அமர்ந்தோம். விமானம் டாஷ்கண்டை விட்டு மாஸ்கோவிற்குப் புறப்பட்டபோது, மூன்று மணி காலதாமதமாகியிருந்ததை உணர்ந்தோம். பயணிகளிடம் ஆயுதங்கள் உள்ளனவா என்று பார்க்கும் காவல்துறையினரின் சோதனையைக் காணவில்லை.

'கால தாமதமாகிப் புறப்படுகிறது; டாஷ்கண்டில் நேர்ந்ததைப்போல, மாஸ்கோவிலும் நம்மை அழைத்துக் கொண்டு போக வேண்டியவர்கள் நாம் சேரும்போது