பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

தோடு ஒருமாத காலம் அங்கிகழ்ச்சியைக் கொண்டாடி ர்ைகள். அக்கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் பொருட்டு. இந்திய தாதுக்குழுவில் ஒருவகைச் செல்லும் பேறு எனக்குக் கிட்டிற்று. அதற்கு முன்னரும் இரு முறை அங்காட்டிற்குச் சென்று வரும் வாய்ப்புகள் பெற்றேன்.

நான் அங்கே கண்டதும் கேட்டதும் உணர்ந்ததும் எனக்கு எழுச்சியூட்டின: ஆர்வமூட்டின. யான் பெற்ற இன்பத்தை என்னருந் தமிழ்மக்களோடு பகிர்ந்து கொள் வதன்ருே முறை. அப்படிப் பகிர்ந்து கொள்வதற்கு வாய்க்காலாக அமைந்தது, தினமணி கதிர்".

"தினமணி கதிர் ஆசிரியரும் என் மெய்யன்பருமான திரு. சாவி அவர்கள் என்னைத் தூண்டி எழுத வைத்த தால், என் க்ாட்சிகளும் கருத்துகளும் தமிழ்மக்களின் சொத்தாக முடிந்தது. எனவே திரு. சாவி அவர்களுக்கு நான் கடமைப்பட்டிருப்பதுபோலவே தமிழ் கூறும் கல் லுலகமும் கடமைப்பட்டிருக்கிறது.

சோவியத் மக்களோடு என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரைத் தொடர்களே அழகிய நூலாக வெளியிட முன்வந்த, வானதி பதிப்பக உரிமையாளர் திரு. திருநாவுக்கரசு அவர்களுக்கும் காம் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

-நெ. து. சுந்தரவடிவேலு