பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

மாதிரி, மற்றவை ஆட வேண்டிய கிலே உருவாகாதா? இக் கேள்விகள் எழலாம். எங்களுக்கு இவ்வையங்கள் தோன்றின.

சோவியத் காட்டின் அரசியல் அமைப்பைக் கவனித் தால் அது, தெளிவு படுத்தும்.

சோவியத் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடியரசிற்கும் தனித் தனி சட்டமன்றம் உண்டு. எல்லாக் குடியரசுகளும் அடங்கிய சோவியத் நாடு முழுமைக்குமான சட்டமன்றம் உண்டு. இந்த நாடாளுமன்றம் இரு அங்கங்களால் ஆகியது. ஒரு அங்கத்திற்குப் பெயர், ஒன்றியங்களின் சோவியத்-அதாவது ஒன்றியங்களின் அவை, என்ப தாகும். மற்ருெரு உறுப்பு தேசிய இனங்களின் அவை என்பதாகும். இரண்டும் சேர்ந்ததே, சோவியத் நாட்டின் தலைமை அவை-சுப்ரீம் சோவியத் ஆகும். ஒன்றியங் களின் அவையில், எழுநூற்று அறுபத்தேழு உறுப்பினர் கள் உள்ளார்கள். தேசிய இனங்களின் அவை எழுநூற்று ஐம்பது உறுப்பினர்களேக் கொண்டது.

1.

ஒன்றிய அவைக்கான தொகுதிகள், மூன்று இலட்சம் வாக்காளர்களுக்கு ஒரு தொகுதி என்னும் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. ஆகவே ஒன்றிய அவைக்கு பெரிய குடியரசுகள் நிறைய உறுப்பினர்களே அனுப்பும். சிறிய குடியரசுகள் சிலரையே அனுப்பும்.

இதற்கு மாற் று, தேசிய இனங்களின் அவையில் வைத்திருக்கிருர்கள். வாக்காளரின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, இந்த அவைக்கு உறுப்பினர் எண்ணிக்கை முடிவு செய்யவில்லை. அங்கே எல்லா குடியரசுகளுக்கும் ஒரே வலிமை. பெரிய குடியரசாகிய இரஷ்யக் குடியரசுக்கு முப்பத்திரண்டு இடங்கள். சிறிய குடியரசாகிய எஸ்தோனியாவுக்கும் அதே முப்பத்திரண்டு