பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

தேர்தலில் வாக்களிக்கலாம். இருபத்தோரு வயது முடிந்தால், குடியரசின் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க லாம். இருபத்து மூன்று வயது கிரம்பியவர்கள், சோவியத் ஒன்றியத்தின் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கலாம், இதில் ஆண் பெண் என்ருே, இன வேற்றுமை அடிப்படையிலோ, சமய வேற்றுமையைக் காட்டியோ உரிமை மறுக்கப்படுவதில்லை. ஒவ்வொரு குடியரசுக்கும் ஒர் சட்டசபை உண்டு. அத்தனைக் குடியரசு களும் சேர்ந்த சோவியத் நாட்டிற்கு நாடாளு மன்றம் உண்டு. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் எத்தனை ஆண்டுகளுக்கு ஒர் முறை ? நான்கு ஆண்டுகளுக்கு ஒர் முறை தேர்தல் நடக்கும்.

சோவியத் நாட்டில் ஒரே ஒரு கட்சியே அனுமதிக்கப் படுகிறது. அதுவே பொது உடமைக் கட்சி. அக் கட்சியில் கண்டவர்கள், உறுப்பினராகிவிட முடியாதாம். பல் லாண்டு கட்சி உறுப்பினராகப் பணிபுரிந்தவர்கள் அறி முகப்படுத்தியவர்களே மட்டுமே, பல கண்டிப்பான கண் னேட்டங்களுக்குப் பிறகு சேர்த்துக் கொள்வார்களாம். கட்சியில் சேராதவர்களும் தேர்தலில் போட்டியிடலாம். அப்படிப்பட்டவர்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப் புகள் உண்டா? உண்டு.

சோவியத் நாட்டின் நாடாளு மன்றத்தில் ஆயிரத்து ஐநூற்றுப் பதினேழு உறுப்பினர்கள். அவர்களில் முன்னுரற்று எழுபத்தாறு பேர்கள், கட்சியில் சேராத, தனி நபர் சிறப்பால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அந்த நாட்டிலாவது கட்சி முத்திரையில்லாதவர்களுக்கும் கிராக்கி. குடியரசுகளிலும் தனி நபர்கள், தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிருர்கள்.

பெண்களின் தேர்தல் வாய்ப்பு எப்படியோ? அவர் களும் தேர்தல்களில் போட்டியிட்டு, தேர்ந்தெடுக்கப்