பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

படுகிரு.ர்கள். பெண்களையும் தேர்ந்தெடுத்தோம் என்று சொல்லிக் கொள்ளும் பொருட்டு, ஒப்புக்குச் சிலரைத் தேர்ந்தெடுக்கிருர்களா? இல்லை. மெய்யாகவே ஆண் களோடு சம வாய்ப்பு உண்டா? மெய்யாகவே வாய்ப்புக் கொடுக்கிருர்கள். நாடாளு மன்றத்தில் நானூற்று 'இருபத்தைந்து பெண்கள் உறுப்பினர்களாக இருக்கிருர் கள். மாஸ்கோ நகராட்சிக்கு 858 உறுப்பினர்கள் உண்டு. அவர்களில் 377 பேர் பெண்கள்.

நகராட்சி உறுப்பினர் பதவியோ சட்டமன்ற உறுப்பினர் பதவியோ தொழில் அல்ல. அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், முன்னே செய்து வந்த அலுவலை அல்லது தொழிலே விட்டு விட்டு, உறுப்பினர் பதவியையே தொழிலாக மாற்றிக் கொள்ள முடியாது. தேர்ந்தெடுக் :கப்பட்டவர் கூட்டங்களுக்குச் செல்வதை வேலையாகக் கருதப்படும். அவை முடிந்ததும் உறுப்பினர் தத்தம் வேலைக்கோ அலுவலுக்கோ திரும்பி விடவேண்டும். அதாவது, ஏதாவதொரு தொழிலில் இருந்து சம்பாதித்து சாப்பிட்டுக் கொண்டு, மாநகராட்சி மன்ற, சட்ட மன்ற, நாடாளுமன்றப் பணிகளில் ஈடுபடவேண்டும். உழைப் :பாளர்கள் ஆட்சியில், நாடாளுமன்றத்தவரும் உழைப்

பாளியாக நீடிக்க வேண்டும்.

o, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை, கான்காண்டு

காலம் முடியு முன்பே வாக்காளர்கள் திருப்பி அழைத்துக் கொள்ள சோவியத் அரசியல் சட்டம், இடம் வைத்திருக் கிறதாம். வாக்காளர்களில் பாதிப் பேர் அப்படி முடிவு சொன்னல், உறுப்பினர் பதவியை விட்டுவிட வேண்டும்.

அத்தகைய முடிவுக்கு முன்னர், தொகுதி முழுவதும்

கிருத்தரங்கம் கடக்கும். அப்படிப்பட்ட நிலை, சிற்சில வேளை உருவாகியுள்ளதாம்.