பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

உறைந்து கிடந்தது. மரங்கள் இலைகளே இழந்து விட்டு மொட்டைகளாக இருந்தன. சில சென்டிமீட்டர் உறை பனியின் மேல் கடந்து செல்ல வேண்டிய கிலே. உறை பனியின் மேல் நடந்து சென்ருர்கள். பயணிகள். தாதுக் குழுவைச் சேர்ந்த நாங்கள், சில மீட்டர்கள் அாரமே அப்படி கடக்க நேர்ந்தது.

எங்கள் விமானம் கிற்குமிடத்திற்கு அருகில், இரு பெரிய கார்கள் நிற்பதைக் கண்டேன். கான், கடைசி கீழ்ப் படியில் கால் வைத்ததும், ஒர் அம்மையார், விரைந்து வந்தார். கை குலுக்க, கையை நீட்டியபடியே.

'இந்திய தாதுக் குழுவா? என்று கேட்டார். "ஆம்; கான், வேலு", என்று பதில் கூறிவிட்டு கை குலுக்கினேன். -

'என் பெயர் திருமதி லுபோ முத்ரோவா’ என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். இவர் மாஸ்கோ இந்திய சோவியத் நட்புறவுக் கழகத்தின் உயிர்காடி ஆவார். என்னுடன் வந்த இரு நண்பர்களேயும் தனித் தனியே அறிமுகப் படுத்தினேன். ஒவ்வொருவரோடும் கை குலுக்கினர். பின்னர், தன் அருகிலிருந்த மொழி பெயர்ப் பாளரையும், நண்பரையும் எங்களுக்கு அறிமுகப் படுத்தினர். மொழி பெயர்ப்பாளர் பெயர் வ்லாடிமீர். நண்பர் பெயர் அலெக்ஸாண்டர், அறிமுகம் முடிந்ததும், "பனி பெய்து கொண்டே இருக்கிறது. தலையில், குல்லாய் அணிந்திருக்கிறீர்கள். ஆயினும் வெளியில் கிற்கா, தீர்கள். உடம்புக்கு நல்லதல்ல" என்று கூறிக் கொண்டே அருகிலிருந்த கார் ஒன்றில் எங்களை ஏற்றி விட்டார். தானும் ஏறி அமர்ந்து கொண்டார். மொழி பெயர்ப்பாளர், அதே காரில் ஏறிக் கொண்டர்ர்.

"நாம் காத்திருக்கத் தேவையில்லை. உங்கள் பெட்டிகளை எடுத்துக் கொண்டு, அடுத்த கார் வரும்