பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

விரைவில் வந்துசேரும். அதற்கு திரு. அலெக்ஸாண்டரை விட்டு விட்டுப் போவோம். உங்கள் பெட்டிச் சிட்டுகளைக் கொடுங்கள்" என்ருர், அம்மையார். முட்டை இட்டு களைப் பெற்று, மொழி பெயர்ப்பாளர் ஒருவரிடம் கொடுத்து, உரிய ஆணையைக் கூறி விட்டு, காரை ஊருக்குள் போகச் சொன்னர்.

எங்கள் கார், பறந்து சென்றது. முடிக் கிடக்க, கண்ணுடிகளின் மூலம் இரு மருங்கிலும் பார்த்தோம். வழி நெடுகிலும் பனி பெய்து கொண்டிருந்தது. சாலே யோரம் முழுவதும் உறை பனி முடிக் கிடந்தது. எங்கும் வெண்மை, துரயவர் உள்ளம் போல். அது. உள்ளங் கவரும் காட்சி. நெடுஞ்சாலை நிலையென்ன ?

அப் பனி மழையிலும், கார்களும் வாடகைக் கார் களும் பேருந்து வண்டிகளும் பார வண்டிகளும் சங்கிலித் தொடர் போல ஒடிக் கொண்டிருந்தன. அவற்றின் அழுத்தத்தால், சாலையில் வீழ்ந்த பனி, கரைந்து நீராக ஓடின.

எங்கள் பயணத்தைப் பற்றிய விசாரிப்பு சில மணித் துளிகளில் முடிந்தது. அப்புறம் பேச்சு, மாஸ்கோ வையும் இரஷ்யாவைப் பற்றியும் திரும்பிற்று.

நாங்கள் வந்து இறங்கிய மாஸ்கோ விமான கிலேயம், வெளிநாட்டுப் பயணத்திற்கான விமான நிலையமாகத் தோன்றவில்லையே. சென்ற இரு முறை பார்த்ததற்கு வேருக இருக்கிறதே என்றேன்.

ஆம் வேறு இது அனைத்து காட்டுப் பயண :விமான கிலேயம் அல்ல. சோவியத் காட்டுக்குள் பயணஞ் செய்வோருக்காக, மாஸ்கோவில் மூன்று விமான நிலை :பங்கள் உள்ளன. அதில் ஒன்று இது" என்ருர் திருமதி முத்ரோவா. #