பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தோராம் ஆண்டு, ஆகஸ்ட் ஒன்பதாம் நாள், குறிப்பிடத்தக்க நாள். இந்திய வரலாற்றில் சிறப்பாகக் குறிப்பிடத் தக்க நாள். இப்படி எதிர்கால வரலாற்று ஆசிரியர்கள் மதிப்பிடுவார்கள். உலகில், அமைதியை கிலே கிறுத்து வதற்காக, எடுத்த முயற்சிகளில், முக்கியமான ஓர் நடவடிக்கை எடுக்கப்பட்ட நன்ள்ை. என்று வரலாற்றில் சிறப்பிடம் பெறப்போகும் நாள், அதுவாகும்.

அப் பொன்ளிைல், இந்தியாவும் சோவியத் ஒன்றியமும் நல்லதோர் உடன்படிக்கையில் கையெழுத் திட்டன. அவ்வுடன்படிக்கை, எந்த அடிப்படையில் அமைந்துள்ளது? அமைதி, நட்புறவு, ஒத்துழைப்பு ஆகிய மூன்றின் அடிப்படையில் அமைந்துள்ளது.