பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

வேறு. பல மாடிக் கட்டடங்கன், மையக் கதகதப்பு. ஏற்பாடுகள் கொண்டன.

மாஸ்கோ நகர குடிமக்களில் அலுவல் பார்ப்பவர்கள் ஏராளமா ? தொழிலாளிகள் அதிகமா ? மாஸ்கோ நகரத்தில் வாழ்வோர். எழுபது இலட்சம் மக்கள். அவர் களில் பெரும்பாலோர் தொழிலாளிகள். காரணம் ?

மாஸ்கோ, சோவியத் ட் டி ன் இரஷ்யக் குடியரசின் தலை நகரம் மட்டுமல்ல. அது பெரிய, தொழில் நகரம் ஆகும். பெரிய, பொறியியல் தொழிற் சாலைகள் நூற்று இருபது, அங் நகரில் உள்ளன. கார் உற்பத்தி, விமான உற்பத்தி, கப்பல் கட்டுதல், உர உற்பத்தி, இரயில் சரக்குப் பெட்டிகள் செய்தல் ஆகியவை. செய்யும் தொழிற்சாலைகள். நெசவாலைகள், உடைத் தொழிற் கூடங்கள், உணவுப் பண்ட உற்பத்தி நில: யங்கள் பலப் பல.

மாஸ்கோ மாநகரை ஐங் கடலூர் என்று சொல்ல. லாம். அது கடல் ஒரத்தில் இல்லை. ஆயினும், மாஸ்கோ கால்வாய் மூலம், ஐந்து கடல்களோடு மாஸ்கோ உறவு கொண்டுள்ளது. அக் கால்வாயில் கப்பல்கள் செல் கின்றன. அக் கப்பல்கள், மாஸ்கோவை வெண்மைக் கடல், கருங்கடல், பால்டிக் கடல், காஸ்பியன் கடல், அளோவ் கடல் ஆகிய ஐந்து கடல்களோடு இணைக் கின்றன.

வெளிகாட்டுப் பயணத்திற்காக ஓர் விமான கிலேயமும் உள்நாட்டும் பயணத்திற்காக ஓர் விமான கிலேயமும் இருப்பதுபோல், இரயில் பயணத்திற்கும் பல பாதைகள் உள்ளன. பதிைேரு பெரிய இரயில் பாதைகள் மாஸ்கிே. விலிருந்து புறப்படுகின்றன. அவை முற்காலத்தில் வண்டிப் பாதைகள். இப்போது அவை, மின்சாரப்

பாதைகளாகவும், டீசல் பாதைகளாகவும் மாறியுள்ளன.