பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

மாஸ்கோவிலிருந்து பல நகரங்க்ளுக்கு நெடுஞ் சாலைகள் உள்ளன. இரஷ்யக் குடியரசில் மட்டும் மொத்தம் ஒரு இலட்சம் மைல் நீளத்திற்கு 'தார். அல்லது

சிமெண்டால் ஆகிய சாலைகள் உள்ளனவாம். மற்ற குடியரசுகளில் நல்ல நெடுஞ்சாலைகளுக்குக் குறைவில்லை.

மாஸ்கோ நகரத்திற்குள் போக்குவரத்து சாதனங்கள் எப்படி? நகர போக்குவரத்து சாதனங்கள் பலவகை.

பாதாள இரயில்வே, சிறப்பாகக் குறிப்பிடத் தக்கதாம். மாஸ்கோ பாதாள இரயில்வே மின்சாரத். தால் இயங்குவது. அது அழகிற்கும் தூய்மைக்கும் விரைவிற்கும் உலகப் புகழ் பெற்றது. அதில் பல கிலேயங்கள் உள்ளன. பாதாள இரயில் கிலேயங்கள் தோற்றத்தில் ஒன்றைப்போல் மற்ருென்று இராது. ஒவ்வொன்றும் தனித்தனி பொலிவோடு விளங்கும் வகையில் திட்டமிட்டு அமைத்திருக்கிருர்கள்.

பயணக் கட்டணம் எப்படி? பயணக் கட்டணம் தூரத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படவில்லை. ஓர் நிலையத்தில் இரயில் ஏறி அடுத்த நிலையத்தில் இறங்கிலுைம் சரி; இங்கு ஏறி. பத்தாவது நிலையத்தில் இறங்கிலுைம் சரி, ஒரு கோடி 'யிலிருந்து அடுத்த கோடிக்குச் சென்று இறங்கிலுைம் சரி: கட்டணம் ஒன்றே. கட்டணம் பெருந் தொகையா? இல்லை. ஐந்து கோபெக்ஸ் மட்டுமே கட்டணம். கோபெக்ஸ் என்பது எவ்வளவு? ஒரு ரூபுளுக்கு நாறு கோபெக்ஸ். ரூபுளுக்கு ஏழரை ரூபாய் என்பதை தினத்துக்கொண்டு. கோபெக்ஸை காசாகக் கணக்குப் போடத் தொடங்குவது தவறு. அவர்கள் நாணயத்தில் ஐந்து காசுக்கு, மாஸ்கோவின் ஓர் கோடியிலிருந்து மற்ருேர் கோடிக்கு, பாதாள இரயில் பயணம் செய்யலாம். அதுமட்டுமா? அதே ஒரே கட்டணத்தில்,