பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

களில் அதை வாடகைக்குவிட்டு சம்பாதிக்கக்கூடாது

அப்படிச் செய்வதும் குற்றம்.

தனக்குப் பின்னல், அச் சொத்துகள் என்னவாகும்:

தன் மக்களுக்குச் சேருமா ? காட்டுக்குச் சேருமா?

சொத்துக்குரியவர், தன் தனி நபர் சொத்துக்களை, மக்களுக்கே கொடுக்க வேண்டுமென்பதில்லை, அவர் விருப்பப்படி, யாருக்கு வேண்டுமானலும் உயில் எழுதி வைத்து விடலாம். அவ்வுயிலில் கண்டவர்களுக்கே, அச் சொத்து பிரித்துக் கொடுக்கப்படும். உயில் மூலம் நன்மை பெறுபவர், சோவியத் குடிமகளுகவோ மகளா கவோ இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அதாவது சோவியத் குடிமகன், இந்தியக் குடிமகனுக்கு, தன் சொத்தை உயில் எழுதி வைக்கலாம். அது செல்லு படியாகும். அது கிறைவேற்றப்படும்.

தனி நபர், யாருக்கும் கொடுக்க விரும்பாததை, அரசுக்கு உயில் எழுதிக் கொடுத்து விடலாம். சிறந்த ஒவியர்கள், சிற்பிகள் ஆகியோர் தங்கள் உருப்படிகளே உயில் மூலம் அரசின் பொருட்காட்சி சாலைகளுக்கு வழங்கி விடுதல் மீண்டும் மீண்டும் கிகழும் நிகழ்ச்சி

யாகும்.

உயிலே எழுதி வைக்காதவருடைய சொந்த சொத் .துகள், அவரது பையன்களுக்கும் பெண்களுக்கும் சமமாக உரியனவாகும். பையன், பெண்கள் மறைந்து, பேரன், பேத்திகள் இருந்தால், அவர்களுக்குச் சேரும். இப்படிப் பட்ட உறவினர்கள் இல்லாதபோது, அவரோடு நெடுநாள். வாழ்ந்தவருக்குச் சேரும். -

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தொன்றில் மாஸ்கோவில் எண்ணற்ற தனியார் கார்களேக் கண்டேன்.