பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

அமைதி தேவை. அது வீட்டிற்கும் தேவை. நாட்டிற்கும் தேவை. அதுவே வளர்ச்சிக்குத் துணை: குடும்பங்களின் வளர்ச்சிக்குத் துணை, நாடுகளின் வளர்ச்சிக்குத் துணை; உலக மக்களின் வளர்ச்சிக்குத் துணை. எனவே, அமைதி நிலவ, அவாவ வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

யார் எடுக்க வேண்டும்? ஊர் கூடிச் செக்கு தள்ள முடியுமா? செக்கின் பக்கத்திலே உள்ள இருவர், தள்ள முயன்ருல், மற்றவரும் துணைக்கு வரக்கூடும். இதை மனதில் கொண்டு, இந்தியாவும் சோவியத் நாடும், அமைதி காக்கும் உடன்படிக்கை செய்து கொண்டன. எவ்வளவு காலத்திற்கு இவ்வுடன்படிக்கை இருபது ஆண்டு காலத் திற்கு இவ்வுடன்படிக்கை. பின்னர் மேலும் இதை நீடித்துக் கொள்ளலாம். நீடித்துக் கொள்வதற்கான நட்பும் நம்பிக்கையும் தொடரட்டும்.

அமைதி காக்க ஒப்புக் கொண்டுள்ள. இரு நாடுகளுக் கிடையே நட்புறவும் ஒத்துழைப்பும் இன்றியமையாதன. இது வெளிப்படை. எனவே நட்புறவையும் ஒத்துழைப் பையும் மற்ற இரு அடிப்படைகளாகக் கொண்டு, உடன்படிக்கை செய்து கொண்டுள்ளோம்.

இவ்வுடன்படிக்கை தேவையானது; இத்தியாவிற்கு நன்மையானது; காலமறிந்து செய்துகொண்டது. இதை, பின்னர் வெடித்த நிகழ்ச்சிகள், மெய்ப்பித்துவிட்டன.

காலத்தினற் செய்த இவ்வுதவி வரவேற்கத் தக்கது: போற்றத்தக்கது. இவ்வுடன்படிக்கை கையெழுத்தான விதம் மேலும் போற்றத்தக்கதாம்.

ஆகஸ்டு எட்டாம் நாள் முதல் பதினேராம் நாள் வரை இந்தியாவும் சோவியத் நாடும், உடன்படிக்கை யொன்று செய்துகொள்வது பற்றி, தில்லியில் பேச்சு