பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

சகவாழ்வு வாழ்ந்து, அவர்களுக்கும் உதவி செய்ய வேண்டுமென்று வழிகாட்டியவர், மாவீரர் லெனின். ஆவார். சகவாழ்வு வழியைப் பின்பற்றி, இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு உதவி வரும் சோவியத் காட்டோடு. எங்கள் நாடு அண்மையில் இருபதாண்டு கால உடன் படிக்கை செய்து கொண்டதை பெரிதும் வரவேற்கிருேம். இவ்வுடன்படிக்கை, நமக்கிடையே நட்பை வளர்ப்பதாக; கூட்டுறவைப் பெருக்குவதாக அமைதிக்குத் துணை நிற்பதாக, வளர்க இந்தோ சோவியத் நட்பு வாழ்க மானுடம்."

இக் கருத்துப்பட ஆங்கிலத்தில் உரையாற்றினேன். என் உரையைப் பதிவு செய்துகொண்டார். அடுத்து மற்ற இருவருடைய உரைகளைப் பதிந்து கொண்டார். அவர்களும் உடன்படிக்கையை ஆதரித்தும் விரும்பியும் உரையாற்றினர்கள். பின்னர் மூன்று பேச்சுகளையும் போட்டுக் காட்டினர். எங்கள் குரலை நாங்களே கேட்டோம். நன்ருகப் பதிவாகியுள்ளதாக உணர்ந்தோம். அவரும் அப்படியே கருதினர். அந்த அம்மாள் நன்ருக ஆங்கிலம் பேசினர்.

எங்களுக்கு நன்றி கூறிவிட்டு, பதிவுப் பொறிப் பெட்டியை மூடி எடுத்துக் கொண்டு, எங்களிடம் விடை பெற்றுச் சென்ருர். அன்று மாலை என் பேச்சு ஒலிபரப் பப்பட்டதாக இந்திய நண்பர்கள் சொல்லக் கேட்டேன்.

எங்கள் வானெலியுரைகள் பதிவாகி முடியும் வேளை, எங்கள் பெட்டிகளும் வந்து சேர்ந்தன. அவ்வளவு: சுறுசுறுப்பாக வேலை நடந்தது. உரிய அறைகளில் பெட்டிகளைக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். -

அங் நேரம், பிற்பகல் இரண்டரை மணி. விமானத் திலேயே உணவருந்தி விட்டு வந்ததால், பகல் உணவு தேவையில்லே என்று கூறிவிட்டோம்.