பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94.

கூடத்திற்குச் சென்றேன். அது சிறியதுமல்ல; பெரியதும் அல்ல; அடக்கமானது.

அங்கே, வ்லாடிமீரும், அலெக்ஸாண்டரும் மற்ற இந்திய நண்பர்கள் இருவரும் ஓர் மேசையைச் சுற்றி அமர்ந்திருந்தனர். அம் மேசையின்மேல், இந்தியாவின் கொடி வைக்கப்பட்டிருந்தது. வேறு மேசைகளைக் கவனித்தேன். வெவ்வேறு நாட்டுக் கொடிகள், காலைந்து மேசைகளில் இருந்தன.

தூதுக் குழுக்கள் சாப்பிட வரும்போது, அவர் களுக்காக ஒதுக்கி வைக்கும் மேசையின் மேல் தூதுக் குழுவினரது நாட்டின் கொடியை வைப்பது அங்குள்ள வழககம.

அப்போது, ஐந்தாறு நாடுகளின் தாதுக் குழுக்கள் அவ்வோட்டலில் தங்கியிருப்பதை ஊகித்துக் கொண் டோம்.

ஆறு மணிக்கு, இரவு சாட்பாடு என்பது நமக்கு வியப்பாக இருக்கும். மேடுைகளில் இது சாதாரணம். அவ்வளவு சீக்கிரம் உண்டு விட்டு, நாடகம், நடனம், சர்க்கஸ் ஆகியவை பார்க்கப் போவது மேட்ைடு மக்களின் பழக்கம். கேளிக்கைகளைப் பார்த்துவிட்டு, வீட்டிற்கோ, ஒட்டலுக்கோ, திரும்பிய பிறகு, இலேசாகச் சிறிது சாப்பிட்டு விட்டு, உறங்கப் போவார்கள்.

அவர்கள் வழக்கப்படி, நாங்களும் ஆறு மணிக்கே சாப்பிட்டோம். பிறகு சர்க்கஸ் பார்க்கச் சென்ருேம். அங்கு, கார்கள் நிற்குமிடத்திற்கும் சர்க்கஸ் நுழைவாயி லுக்கும் சற்று தாரம். அந்த தாரத்தை நடந்தே கடக்க வேண்டும். அன்றிரவு பனி பெய்து கொண்டே இருந்தது. தரையில் உறை பனி. அது எளிதாக சருக்கும். உறை பனியின் மேல் நடப்பதற்குப் பழக்கம் வேண்டும்.