பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

செய்கிறது. 'ஒசி சீட்டு சங்கதியும் கிடையாது. ஒசி சீட்டு கொடாததால் வரும் கசப்பும் கிடையாது.

அக் காட்டில் சர்க்கஸ் பள்ளிக் கூடங்களும் உள்ளன. அங்கே சரியான பயிற்சி கொடுக்கிருர்கள். சர்க்கவில் சேர்ந்த பிறகும் கடுமையான பயிற்சி உண்டு.

பயிற்சியின் பலன்களை உற்று நோக்கி ஆய்ந்து, முறைகளே மாற்றி, மேலும் பலன் பெறுவதற்கு வழி வகைகள் செய்துள்ளார்கள். சர்க்கஸ் துறையில் பட்டு மல்ல; எல்லா துறைகளிலும் பயிற்சிக்கும், பயிற்சியைப் பற்றிய பலன் ஆய்வுக்கும் முறையான ஏற்பாடுகள் உள்ளன. ஆகவே, எல்லாத் துறைகளிலும், அவர்கள் கர உயர்வு பெற முடிகிறது.

சர்க்கஸ் வேடிக்கைகளே நடத்தி மகிழ்வித்தவர்களில் ஆண்களும் இருந்தார்கள்; பெண்களும் இருந்தார்கள். எல்லோரும் திறமையாக ஆடினர்கள். சப்பென்றிருந்த கிகழ்ச்சி ஒன்றுகூட இல்லை. கோமாளிகள், இருவர் வழக்கம்போல், இடையிடையே வந்து, ஆடினர்கள். பார்ப்பதற்குக் கோமாளிகளாக, கோமாளி உடையில் வந்தாலும், அவர்களும் பல வித்தைகளில் நல்ல தேர்ச்சி பெற்றவர்கள் என்பதைக் காட்டாமல் போகவில்லை.

சர்க்கஸ் ஆட்டத்தின் ஒவ்வோர் நிகழ்ச்சியின்போது, ஒவ்வோர் வகை வெளிச்சம் போட்டார்கள். சில வேளை ஒரே ஒளிமயமாக இருக்கும். சில வேளை, மங்கிய நிலவிலே காண்பது போன்ற, ஒளிநிலையை உருவாக்குவார்கள். இப் ப்டியே வண்ணங்களும் நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி மாறுபடுவ துண்டு.வேண்டியபோது,வேண்டிய ஒளி நிலைகளையும் வண் கிணங்களையும் போடுவதற்கு ஏற்ருற்போல் ஒளி அமைப்பு