பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

இந்த அருஞ்செயலைச் செய்து முடிக்கவும், சர்க்கஸ் மணி யடிக்கவும் சரியாக இருந்தது. விரைந்து உள்ளே சென்று

  • பின் பாதியில் நடந்த சிறந்த ஆட்டமொன்றை. ...நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

சரிவான பலகையொன்று அரங்கத்தின் தரையிலே வைக்கப்பட்டிருந்தது. அது தாவும் பலகை. அதன் அருகே, இருவர்'கின்றுகொண்டிருந்தனர்.

அரும்பு மீசை இளைஞன் ஒருவன், ஓடிவந்து. தாவும் பலகையின்மேல் சில அடிகள் ஓடி, ஏறிக் குதித்து, அருகி. லிருந்த இருவர் தோள்களின்மேல் நின்ருன்.

அதற்குமேல், கம்பிகளில் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்த, மரப் பலகையின்மேல், வேருெருவர் நின்று கொண்டிருந்தார்.

இளைஞன், தோழர்களின் தோள் மேலிருந்து எகிறின்ை. உயரத் தாவி மேலே தொங்கிக் கொண்டிருப் பவர்களின் தோள்களில் கால்களைச் சரியாக ஊன்றி. கின்ருன். மரப்பலகையைத் தாங்கும் கம்பியை, சிலர் கெட்டியாக இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தனர்.

இளைஞர், பலகைமேல் இருப்பவரின் தோளின்மேல் நின்றதும், கம்பிக் கயிற்றில் இணைத்துள்ள இரும்பு வளைய மொன்றை, அவனிடம் வீசி எறிந்தனர். அவன் அதை எட்டிப் பிடித்து, இடுப்புக் கச்சையில் செருகிக் கொண்டான்.

இதற்கு மேலே நாற்காலியொன்று கம்பியில் தொங்கிக் கொண்டிருந்தது.

விசில் அடிக்கப்பட்டது. பலகைக்காரர், எட்டிப் பிடிப்பவர்போல் குதித்து உயர்ந்தார். அவர் தோளின்