பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

4

தந்தையார் வந்தார். அறையில் பேனா காணாததைக் கண்டார். வேலையாட்களை கடிந்தார். 'கடும் தண்டனை தருவேன்’ என்று மிரட்டினார். பயன்? ஏதுமில்லை.

வீடு முழுவதும் தேடினார்கள். ஜவஹர் அறையை சோதித்தனர். கண்டெடுத்தனர் பேனாவை, நரசிம்மம் ஆனார் தந்தை. ஒரே மகன் என்றும் பாராது அடித்து நொறுக்கி விட்டார்.

ஓடி வந்தார் தாய்.

'பிடித்தொரு தந்தை தான் அடித்தால் தாய் அணைப்பள்’ என்ற வாக்கின்படி அணைத்தார் மகனை. தடவிக் கொடுத்தார். அடிபட்ட புண்களுக்கு மட்டுமா மருந்திட்டாள்? இல்லை. இல்லை, வேதனையுற்ற மனத்திற்குமே !

பிற்காலத்தில் இச்சிறுவன் சோஷலிஸ்ட்டாக வளர இதைக் காட்டிலும் சிறந்த அறிகுறி உண்டோ?

இரண்டிால் அத்தியாயம்

ஆபத்து, ஆபத்து, ஆபத்து.

நேருவுக்கு அப்போது ஏழு அல்லது எட்டு வயது தான் இருக்கும். அச்சிறுவனுக்கு குதிரை சவாரி செய்வதில் பிரியம் அதிகம். அப்போது அவர்கள் வீட்டிற்கு வந்தது ஓர் அழகிய அரபு குதிரைக் குட்டி.

பிறந்ததே நேருவுக்கு ஒரு புத்துணர்ச்சி. ஒரு மாலை. பெரிய நேரு ஆனந்த பவனத்தில் டென்னிஸ் விளையாட்டு வீரர்களுக்கு ஓர் விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.