பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

94

ஹிஜலி என்றோர் இடம். கல்கத்தாவிலிருந்து எழுபது மைல் தூரத்தில் இருந்தது. அங்கே ஒரு தனிச் சிறை ஒன்று அமைந்தது.

வங்கம் தந்த வாலிப வீரர் பலரை அச்சிறையில் தள்ளியது. பாதுகாவலில் வைத்தது. சிறையிலே கலகம் செய்தார்கள் என்று கூறி துப்பாக்கியால் சுட்டது. இருவர் இறந்தனர்; இருபது பேர் காயமுற்றனர். வங்க இளைஞர் பலரை தூக்கிலிட்டது; துன்புறுத்தியது வதைத்தது; வாட்டியது.

Q Ꭴ. {} Q

எ ல் ைல ப் பு ற மாகாணத்திலே டிசம்பர் மாதத் தொடக்கத்திலே தொண்டர் முகாம் ஒன்று அமைத்தார் எல்லை காந்தி, பீஷாவர் ஜில்லாவிலே, எதற்கு ? தேசிய இயக்கத்துக்குத் தொண்டர் படை தயார் செய்ய. கண்டது அரசாங்கம், கொண்டது கிலி,

கான் சகோதரர்களை அழைத்தது பேசுவதற்கு. சகோதரர்கள் அழைப்பு வந்த உடனே ஓடினார்களா ? இல்லை ! 'காங்கிரசுக்குத் துரோகம் செய்து பேசமாட்டோம்!” என்றார்கள். அவ்வளவுதான்.

" அப்படியா பிடி அவர்களை, தள்ளு உள்ளே ! ’’ என்றார் விலிங்க்டன் துரை. கான் சகோதரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், டிசம்பர் மாதம் 24ந் தேதி.

O O © Ꮐ

ஐக்கிய மாகாணத்திலோ நிலைமை மிக மிக மோசம். வரி கொடுக்க முடியாமல் தவித்தனர் விவசாயிகள். அரசாங்கமோ கிட்டி கட்டி வரி வசூல் செய்தது.

தேச பக்தர்கள் துடித்தார்கள்; கொதித்தார்கள். மீண்டும் போர் தொடங்கவேண்டுமென்று குதித்தார்கள்.