பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

95

' காந்தி வரும் வரை காத்திருப்போம் !" என்றது காங்கிரஸ்,

அவசரப் பட்டுக் காரியத்தை கெடுத்து விடக்கூடாது என்பது காங்கிரஸ் தலைவர்களின் எண்ணம்.

சர்க்காரின் எண்ணமோ வேறு விதமாக இருந்தது.

காந்தி வரும்வரை எதற்காக காத்திருக்க வேண்டும் ?

இப்போதே வலுச் சண்டைக்கு இழுத்து காங்கிரசை அடித்து நொறுக்கிவிட வேண்டும்; சுட்டுப் பொசுக்கி விடவேண்டும்.”

என்று எண்ணிய சர்க்காம் அதற்கேற்ற சந்தர்ப்பத்தை ஆவலோடு எதிர்நோக்கி நின்றது.

முப்பத்தி மூன்றாம் அத்தியாயம்

sę تم می به نام سیت e அவரும் காத்திருந்தார் சந்தர்ப்பமும் வந்ததே

அலகாபாத் ஜில்லாவில் விவசாயிகள் படும் துன்பம் கண்டது காங்கிரஸ் கமிட்டி. சீறி எழுந்தது.

' வரி கொடாதே என்று கூறப் போகிறோம்' என்றது.

' பதறாதே, சற்றுப் பொறு; அவசரப்பட்டு எதுவும் செய்து விடலாகாது. காரியக் கமிட்டியின் அனுமதி பெறாமல் வரிகொடா இயக்கம் தொடங்கக் கூடாது.”* என்று எச்சரிக்கை செய்தது ஐக்கிய மாகாண காங்கிரஸ்.

காரிய கமிட்டியின் அனுமதியை வேண்டியது இயக்கம் தொடங்க.