பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

96

பேசிப் பாருங்கள். ஒன்றும் பயன் விளையாவிட்டால் பிறகு வரி கொடா இயக்கம் தொடங்குங்கள் " என்றது.

அவ்வளவு தான் உடனே ஒரு மகாநாட்டைக் கூட்டியது அலகாபாத் காங்கிரஸ் கமிட்டி, அதுவும் விவசாயிகள் மகாநாடு. அம் மகாநாடு ஒரு தீர்மானத்தையும் நிறை வேற்றியது.

' விவசாயிகளின் கஷ்டங்களை உடனே தீர்க்க வில்லையானால் வரி கொடுக்க முடியாது’ என்பது தான் தீர்மானம்.

வெறும் வாயை மெல்லுகிற பாட்டி அவல் கிடைத்தால் விடுவாளா ?

வலுச் சண்டைக்கு வழி பார்த்த விலிங்க்டன் வந்த சண்டையை விட்டு விடுவாரா ? சீறிப் பாய்ந்தார்.

அவசரச் சட்டங்களை அள்ளி வீசினார். ஐக்கிய மாகாண காங்கிரஸ் தலைவர்களைக் கைது செய்தார்; சிறையில் தள்ளினார்.

இந்த சமயத்திலே ஜவஹர் எங்கிருந்தார் ? பம்பாயில் இருந்தார். கமலாவுக்கு உடம்பு சுகமில்லை. வைத்திய வசதிக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துக்கொண்டு இருந்தார்.

ஐக்கிய மாகாண காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் தள்ளப்பட்ட செய்தி கேட்டார். உடன் புறப்பட்டார் அலகாபாத்துக்கு. டிசம்பர் ஒன்றாந் தேதி,

" என்ன அவசரம்? இன்னும் சில நாட்களில் காந்தி

வந்து விடுவார். அவரைப் பார்த்த பின் போகலாமே ' என்றனர் நண்பர்கள்.