பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

93

" எப்படி என் கடிதம் ?” என்றார் ஜ வ ஹ ர் சூரீ பிரகாசாவிடம்.

' பல்லை உடைத்துக் கையில் கொடுத்து விட்டீர்கள். ஆனால் உங்களை பம்பாய் போக விடமாட்டான் ” என்றார்

பூச் பிரகாசா.

“ எவனும் என்னைத் தடுத்தல் இயலாது. நான் போகத்தான் போகிறேன்.” என்றார் நேரு.

வரி கொடா இயக்கத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த்வர் நேருவே என்று அறிந்தது அரசாங்கம், அவரையும் சிறையில் தள்ள வலை வீசி விட்டுக் காத்திருந்தது.

டிசம்பர் மாதம் 26ந் தேதி காலை, அலகாபாத்திலே ரயில் ஏறினார் நேரு பம்பாய்க்குச் செல்ல.

கொஞ்சம் தூரம் சென்றது ரயில். அலகாபாத் எல்லையில் திடீரென்று நிறுத்தப்பட்டது.

போலீஸ் வான் ஒன்று வந்தது. நின்றது. அதிலிருந்து டி. எஸ் பி, இறங்கினார். குதிரை மீது வந்த போலீஸ் வீரர்கள் சல்யூட் செய்தார்கள். போலிஸ் சூப்பிரண்ட் பின் தொடர்ந்தார்.

நேரு இருந்த கம்பார்ட்மெண்டுக்குள் துழைந்தார்

டி. எஸ். பி. நேருவை கைது செய்தாரி, வானில் ஏற்றிக் கொண்டார்.

ரயில் வண்டி பம்பாய் நோக்கிச் சென்றது. போலீஸ் 'வான் சிறை நோக்கிச் சென்றது.